
திருவிளக்கு பிரார்த்தனையை தினமும் முறையாக சொல்லி வந்தால் கஷ்டங்கள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.
திருவிளக்கு பிரார்த்தனை
“விளக்கே திருவிளக்கே வேதனுடன் நற்பிறப்பே
ஜோதி விளக்கே ஸ்ரீதேவி வெண்மணியே
அந்தி விளக்கே அலங்காரப் பெண்மணியே
காந்தி விளக்கே காமாட்சி தேவியரே
பசும்பொன் விளக்கு வைத்து பஞ்சுத் திரிபோட்டு
குளம் போல் நெய்விட்டு கோலமுடன் ஏற்றி வைத்தேன்
பொட்டும் இட்டேன் குங்குமத்தால் பூமாலை சூட்டி விட்டேன்
ஏற்றினேன் நெய்விளக்கு எந்தன் குலம் விளங்க
வைத்தேன் திருவிளக்கு மாளிகையும்தான் விளங்க
மாளிகையிலே ஜோதியுள்ள மாதாவை கண்டு கொண்டேன்
மாங்கல்ய பிச்சை, மடிப்பிச்சை தாருமம்மா! சந்தானம்
பிச்சையுடன் தனங்களைத் தாருமம்மா! பெட்டி நிறைய
பூஷணங்களைத் தாருமம்மா! புகழ் உடம்பைத் தந்து எங்கள்
பக்கத்தில் நில்லுங்கம்மா! அகத் தெளிவைத் தந்து எந்தன்
அகத்தினில் வாழுமம்மா!
நமஸ்தே! நமஸ்தே! நமஸ்தே!!! ”
இதையும் படிக்கலாம் : விளக்குகளும் விளக்கங்களும்..!