ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதி சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 20வது தொகுதியாக ஆயிரம் விளக்கு தொகுதி உள்ளது. இத் தொகுதி மத்திய சென்னை மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது.
சென்னையில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் ஆயிரம்விளக்கு தொகுதி தனித்துவம் வாய்ந்தது. பல பிரபலங்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதி இது. மறைந்த முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி (கோபாலபுரம்), ஜெயலலிதா (போயஸ்கார்டன்) ஆகியோர் இத்தொகுதியை சேர்ந்தவர்கள். அதேபோல், அமெரிக்க துணைத் தூதரகம், வள்ளுவர் கோட்டம், அண்ணா (ஜெமினி) மேம்பாலம், மறைந்த பிரபல நடிகர் சிவாஜிகணேசனின் வீடு போன்ற முக்கிய இடங்களும் இந்த தொகுதியில் அமைந்துள்ளன.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
1977 | எஸ். ஜே. சாதிக்பாட்சா | திமுக | 26,599 |
1980 | கே.ஏ. கிருஷ்ணசாமி | அதிமுக | 40,499 |
1984 | கே.ஏ. கிருஷ்ணசாமி | அதிமுக | 46,246 |
1989 | மு. க. ஸ்டாலின் | திமுக | 50,818 |
1991 | கே.ஏ. கிருஷ்ணசாமி | அதிமுக | 55,426 |
1996 | மு. க. ஸ்டாலின் | திமுக | 66,905 |
2001 | மு. க. ஸ்டாலின் | திமுக | 49,056 |
2006 | மு. க. ஸ்டாலின் | திமுக | 49,817 |
2011 | பா. வளர்மதி | அதிமுக | 67,522 |
2016 | கு. க. செல்வம் | திமுக | 61,726 |
2021 | எழிலன் நாகநாதன் | திமுக | 71,437 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,14,227 | 1,19,133 | 90 | 2,33,450 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
சென்னை மாநகராட்சி வார்டு எண் 109 முதல் 113 வரை, 118 மற்றும் 119