வீட்டில் துளசி மாடம் வைத்திருப்பவர்கள் தினமும் அல்லது செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் துளசி பூஜை செய்வார்கள்.
இருப்பினும், துளசி பூஜை என்பது கார்த்திகை மாதத்தில் (சுக்லபட்ச துவாதசி) நடைபெறும் சிறப்பு பூஜையாகும். துளசிக்கு இந்த நாளில் தான் திருமணம் நடந்ததாக ஒரு புராணக்கதையும் உண்டு.
ஐப்பசி அல்லது கார்த்திகை மாதம் சுக்லபட்ச துவாதசி அன்று, பிருந்தாவன பூஜை எனப்படும் சிறப்பு துளசி பூஜை நடைபெறும்.
துளசி மாடத்தில் நெல்லிக் கன்றுகளை நட்டு, மகாவிஷ்ணுவை வணங்கி, ஷோடசோபசாரம் செய்யுங்கள்.
வீட்டில் பூஜைக்கு சாளக்கிராமம் இருந்தால் அதையும் பூஜைக்கு பயன்படுத்தலாம். இந்த பூஜையில் பால் பாயச நைவேத்தியம் நடத்துவது சிறப்பு.
இதையும் படிக்கலாம் : குலதெய்வம் வழிபாடு பற்றிய சில தகவல்கள்..!