திண்டிவனம் சட்டமன்றத் தொகுதி  

திண்டிவனம் சட்டமன்றத் தொகுதி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 72வது தொகுதியாக திண்டிவனம் தொகுதி உள்ளது.

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு

வெற்றி பெற்றவர் கட்சி

வாக்குகள்

1951 எம். ஜகன்நாதன் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி 48,783
1957 பி. வீரப்ப கவுண்டர் சுயேச்சை 37,448
1962 எ. தங்கவேலு திமுக 27,687
1967 திண்டிவனம் கே. இராமமூர்த்தி இந்தியத் தேசிய காங்கிரசு 34,106
1971 ஜி. இராசாராம் திமுக 33,933
1977 டி. ஆர். இராசாராம ரெட்டி இந்தியத் தேசிய காங்கிரசு 18,990
1980 கே. எம். தங்கமணி கவுண்டர் இந்தியத் தேசிய காங்கிரசு 29,778
1984 கே. எம். தங்கமணி கவுண்டர் இந்தியத் தேசிய காங்கிரசு 45,404
1989 ஆர். மாசிலாமணி திமுக 39,504
1991 எசு. பன்னீ்செல்வம் இந்தியத் தேசிய காங்கிரசு 48,317
1996 ஆர். சேதுநாதன் திமுக 45,448
2001 சி. வே. சண்முகம் அதிமுக 54,884
2006 சி. வே. சண்முகம் அதிமுக 55,856
2011 த. அரிதாஸ் அதிமுக 80,553
2016 பி. சீதாபதி திமுக 67879
2021 பொ. அர்ச்சுனன் அதிமுக 87,152

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

2022-ன் படி 1,13,185 1,16,954 16 2,30,155

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

திண்டிவனம் வட்டம் (பகுதி)

கூச்சிகொளத்தூர், பாதிரி, கம்பூர், கரிக்கம்பட்டு, ஓங்கூர், அன்னம்பாக்கம், காட்டுப்பூஞ்சை, வடகளவாய், கடவம்பாக்கம், ஆவணிப்பூர், பனையூர், பாங்கொளத்தூர், நங்குணம், நல்லாத்தூர், சாரம், சாலவாதி, மேல்பேட்டை, விட்டலாபுரம், கீழ்கூடலூர், ஈச்சேரி, நொளம்பூர், மங்களம், கீழ் ஆதனுர், பள்ளிப்பாக்கம், எப்பாக்கம், அண்டப்பட்டு, கீழ்பசார், ஆட்சிப்பாக்கம், நாரமகனி, சேந்தமங்கலம், நல்லூர், பந்தாடு, நாகல்பாக்கம், ராயநல்லூர், நகர், அசப்பூர், குரும்பரம் (ஆர்.எப்), கந்தாடு, வட அகரம், புதுப்பாக்கம், குரும்பகம், ஆலந்தூர், வட கொடிப்பாக்கம், சிறுவடி, வைடப்பாக்கம், வட நெற்குணம், கிழ்நெமிலி, வண்டாரம்பூண்டி, கீழ்மண்ணூர், கருப்பூர், கீழ்சேவூர், கீழ்சேவூர் (ஆர்.எப்), கட்டளை, எண்டியூர், ஆத்தூர், வட குலப்பாக்கம், மானூர், மொளசூர், குருவம்மாபேட்டை, ஜானகிபேட்டை, பெருமுக்கல், கீழருங்குணம், வடகொளப்பாக்கம், சேணலூர், கீழ்பூதேரி, குண்ணப்பாக்கம், தென்னம்பூண்டி, மண்டபெரும்பாக்கம், மடவந்தாங்கல், ஏந்தூர், குரூர், வேப்பேரி, முருக்கேரி, கொளத்தூர், நடுக்குப்பம், கேசவநாயக்கம்பாக்கம், திருக்கனூர், ஊரணி, ஆலப்பாக்கம், ஆட்சிக்காடு, பணிச்சமேடு, கீழ்பேட்டை, அனுமந்தை, ஓமிப்பேர், அடசல், ஆடவல்லிக்குட்டம், சாத்தமங்கலம், சிங்கநந்தை, ஆலங்குப்பம், மானூர், வன்னிபேர், பிரம்மதேசம், அரியந்தாங்கல், சொக்கந்தாங்கல், நல்முக்கல், அழகியபாக்கம், டி.நல்லாளம், கீழ்சிவிரி, பழமுக்கல், எலவளைப்பாக்கம், தென்நெற்குணம், கோவடி, ஓமந்தூர், அன்னம்புத்தூர், வரகுப்பட்டு, எரையானூர், கரணாவூர், ஜக்கம்பேட்டை, சிங்கனூர், தென்பசியார், அவனம்பட்டு, தென்களவாய், வேங்கை, கீழ்சித்தாமூர், சொரப்பட்டு, செய்யாங்குப்பம், செட்டிகுப்பம், கூனிமேடு, அரியாங்குப்பம், வெளியனூர், கள்ளகொளத்தூர், கீழ்பேரடிக்குப்பம், கீழ் எடையாளம், கீழ்ப்புதுப்பட்டி, ஓலக்கூர், கீழ்பாதி, மற்றும் ஓலக்கூர் மேல்பாதி கிராமங்கள்.

திண்டிவனம் (நகராட்சி) மற்றும் மரக்காணம் (பேரூராட்சி).

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *