
திருச்சிராப்பள்ளி மேற்கு சட்டமன்றத் தொகுதி திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 140வது தொகுதியாக திருச்சிராப்பள்ளி மேற்கு தொகுதி உள்ளது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
2011 | மரியம் பிச்சை | அதிமுக | 77,492 |
2011
(இடைத் தேர்தல்) |
மு. பரஞ்சோதி | அதிமுக | 69,029 |
2016 | கே. என். நேரு | திமுக | 92,049 |
2021 | கே. என். நேரு | திமுக | 1,16,018 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,28,214 | 1,37,932 | 27 | 2,66,173 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
திருச்சி (மாநகராட்சி) வார்டு எண்: 39 முதல் 42 வரை மற்றும் 44 முதல் 60 வரை.
பெரிய சின்னவடவூர், நத்தர்ஷாபள்ளி, தென்னூர், பிராட்டியூர்(கி), பிராட்டியூர்(மே), பஞ்சப்பூர், கோ அபிசேகபுரம், புத்தூர், சிந்தாமணி, தாமலவாருபயம், பாண்டமங்கலம், உ.திருமலை.
திருச்சிராப்பள்ளி கிழக்கு சட்டமன்றத் தொகுதி