
திருக்கோயிலூர் சட்டமன்றத் தொகுதி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 76வது தொகுதியாக திருக்கோயிலூர் தொகுதி உள்ளது.
சென்னை மாநிலம்
ஆண்டு |
கட்சி |
வெற்றி பெற்றவர் |
1952 | தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி | ஏ. முத்துசாமி |
1957 | சுயேட்சை &
இந்திய தேசிய காங்கிரசு |
எஸ். ஏ. எம். அண்ணாமலை &
குப்புசாமி |
1962 | இந்திய தேசிய காங்கிரசு | இலட்சுமிநரசிம்ம அம்மாள் |
1967 | இந்திய தேசிய காங்கிரசு | ஈ. எம். சுப்பிரமணியம் |
தமிழ்நாடு
ஆண்டு |
வெற்றி பெற்றவர் |
கட்சி |
1971 | ஏ. எஸ். குமாரசாமி | திமுக |
இடையில் தொகுதி மறுசீரமைப்பில் நீக்கப்பட்ட திருக்கோயிலூர் மீண்டும் 2008-ல் உருவாக்கப்பட்டது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
2011 | எல். வெங்கடேசன் | தேமுதிக | 78,229 |
2016 | க. பொன்முடி | திமுக | 93,837 |
2021 | க. பொன்முடி | திமுக | 1,10,980 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,27,582 | 1,26,378 | 34 | 2,53,994 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
திருக்கோவிலூர் தாலுக்கா (பகுதி)
டி.அத்திப்பாக்கம், கொடுக்கப்பட்டு, வேளாகுளம், வசந்தகிருஷ்ணாபுரம், ஆதிச்சனூர், வீரபாண்டி, புளிக்கல், கல்லந்தல், அருணாபுரம், ஓட்டம்பட்டு, தண்டரை, அடுக்கவும், துரிஞ்சிக்காடு . வீரங்காபுரம், கண்டாச்சிபுரம், மேல்வாழை, கீழ்வாழை, ஒதியத்தூர், ஒடுவன்குப்பம், சித்தாத்தூர், செங்கமேடு, மடவிளாகம், புதுப்பாளையம், வேடாலம், அப்பனந்தல், புலராம்பட்டு, திருமலைப்பட்டு, வெள்ளம்புத்தூர், அரசங்குப்பம், நாயனூர், கோட்டமருதூர், ஆலூர், கொலப்பாக்கம், சடகட்டி, நெடுங்கம்பட்டு, கொழுந்திராம்பட்டு, சொரையப்பட்டு, கோட்டகம், கழுமரம், விழ்ந்தை, அகஸ்தியர் மூலை, குலதீபமங்கலம், குடமுரட்டி, மணம்பூண்டி, தேவனூர், வடகரைத்தாழனூர், கொல்லூர், அந்திலி, நெற்குணம், எமப்பேர், அருமலை, மேலகொண்டூர், வி.புத்தூர், காடகனூர், கிங்கிலிவாடி, வி.சித்தாமூர், தனிகேளம்பட்டு, ஆலம்பாடி, சத்தியகண்டனூர், கஸ்பாகாரணை, பெரிச்சானூர், சித்தேரிப்பட்டு, சென்னகுணம், அ.கூடலூர், அயந்தூர், கொடுங்கால், முகையூர், பரனூர், கீழக்கொண்டூர், அத்தண்ட மருதூர், வடக்குநெமிலி, அவியூர், தேவி அகரம், அவியூர்கொளப்பாக்கம், முதலூர், வடமருதூர், சித்தலிங்கமடம், சி.மெய்யூர், வீரசோழபுரம், ஆற்காடு, அருளவாடி, கொங்கராயனூர், பையூர், அண்டராயனூர், டி.புதுப்பாளையம், வீரணாம்பட்டு, கொடியூர், டி.குன்னத்தூர், எல்ராம்பட்டு, காட்டுப்பையூர், வடமலையனூர், வில்லிவலம், அருங்குருக்கை, டி.கொணலவாடி, பெண்ணைவலம், ஆக்கனூர், பாவந்தூர், பனப்பாக்கம், இளந்துரை, மணக்குப்பம், டி.இடையூர், சின்னசெவலை, டி.மழவராயனூர், சிறுவானூர், சிறுமதுரை, மாரங்கியூர், ஏனாதிமங்கலம், எரளூர், வளையாம்பட்டு, மேலமங்கலம், செம்மார், டி.சாத்தனூர், ஏமப்பூர், மலையம்பட்டு, மற்றும் தடுத்தாட்கொண்டூர் கிராமங்கள்.
அரகண்டநல்லூர் (பேரூராட்சி), திருக்கோயிலூர் (நகராட்சி) மற்றும் திருவெண்ணைநல்லூர் (பேரூராட்சி).
உளுந்தூர்ப்பேட்டை சட்டமன்றத் தொகுதி