
திருவாடாணை சட்டமன்றத் தொகுதி இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 210வது தொகுதியாக திருவாடாணை தொகுதி உள்ளது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
1952 | செல்லதுரை | சுயேட்சை | – |
1957 | கரியமாணிக்கம் அம்பலம் | சுயேட்சை | – |
1962 | கரியமாணிக்கம் அம்பலம் | சுதந்திராக் கட்சி | – |
1967 | கரியமாணிக்கம் அம்பலம் | சுதந்திராக் கட்சி | – |
1971 | பி. ஆர். சண்முகம் | திமுக | – |
1977 | கரியமாணிக்கம் அம்பலம் | இந்திய தேசிய காங்கிரசு | 32,386 |
1980 | எஸ். அங்குச்சாமி | அதிமுக | 34,392 |
1984 | கே. சொர்ணலிங்கம் | இந்திய தேசிய காங்கிரசு | 47,618 |
1989 | ராமசாமி அம்பலம் | இந்திய தேசிய காங்கிரசு | 38,161 |
1991 | ராமசாமி அம்பலம் | இந்திய தேசிய காங்கிரசு | 65,723 |
1996 | க. ரா. இராமசாமி | தமாகா | 68,837 |
2001 | க. ரா. இராமசாமி | தமாகா | 43,536 |
2006 | க. ரா. இராமசாமி | இந்திய தேசிய காங்கிரசு | 55,198 |
2011 | சுப. தங்கவேலன் | திமுக | 64,165 |
2016 | சே. கருணாஸ் | அதிமுக (முக்குலத்தோர் புலிப்படை) | 76,786 |
2021 | ஆர். எம். கருமாணிக்கம் | இந்திய தேசிய காங்கிரசு | 79,364 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,44,581 | 1,44,668 | 21 | 2,89,270 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
- திருவாடானை வட்டம்
- இராஜசிங்கமங்கலம் வட்டம்
இராமநாதபுரம் வட்டத்தின் பகுதிகளாக பாண்டமங்கலம், ஆண்டிச்சியேந்தல், வெண்ணத்தூர், பத்தனேந்தல், நாரணமங்கலம், அலமனேந்தல், தேவிபட்டினம், பெருவயல், குமரியேந்தல், காவனூர், காரேந்தல், புல்லங்குடி, சித்தர்கோட்டை, அத்தியூத்து, பழங்குளம், தொருவளுர், வன்னிவயல், சூரங்கோட்டை, பட்டிணம்காத்தான், திருவொத்தியகழுகூரணி, தேர்போகி, திருப்பாலைக்குடி, புதுவலசை, அழகன்குளம், சக்கரக்கோட்டை, கூரியூர், அச்சுந்தன்வயல், லாந்தை, பனைக்குளம், மாலங்குடி, எக்ககுடி மற்றும் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகப் பகுதிகள்.
இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி