திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதி 

திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 63வது தொகுதியாக திருவண்ணாமலை தொகுதி உள்ளது. இத் தொகுதி திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது.

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு

வெற்றி பெற்றவர் கட்சி

வாக்குகள்

1951 இராமச்சந்திர ரெட்டியார் இந்தியத் தேசிய காங்கிரசு 21,579
1957 பி. யு. சண்முகம் சுயேச்சை 48,447
1962 பி. பழனி பிள்ளை இந்தியத் தேசிய காங்கிரசு 35,148
1967 டி. விஜயராசு இந்தியத் தேசிய காங்கிரசு 38,153
1971 பி. யு. சண்முகம் திமுக 46,633
1977 பி. யு. சண்முகம் திமுக 27,148
1980 கே. நாராயணசாமி இந்தியத் தேசிய காங்கிரசு 54,437
1984 எ. எசு. இரவீந்திரன் இந்தியத் தேசிய காங்கிரசு 49,782
1989 கு. பிச்சாண்டி திமுக 57,556
1991 வே. கண்ணன் இந்தியத் தேசிய காங்கிரசு 67,034
1996 கு. பிச்சாண்டி திமுக 83,731
2001 கே. பிச்சாண்டி திமுக 64,115
2006 கு. பிச்சாண்டி திமுக 74,773
2011 எ. வ. வேலு திமுக 84,802
2016 எ. வ. வேலு திமுக 1,16,484
2021 எ. வ. வேலு திமுக 1,37,876

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

2022-ன் படி 1,30,914 1,39,578 41 2,70,533

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

செங்கம் வட்டம் (பகுதி)

மேல்சிறுப்பாக்கம், கீழ்சிறுப்பாக்கம், இராதாபுரம், வாக்கிலாப்பட்டு, சேர்ப்பாட்டு, சே.கூடலூர், வரகூர், காம்பட்டு, வாணாபுரம், மழுவம்பட்டு, தென்கரிம்பலூர், பெருந்துறைப்பட்டு, குங்கிலநத்தம், பேராயம்பட்டு மற்ற்ம் எடக்கல் கிராமங்கள்.

திருவண்ணாமலை வட்டம் (பகுதி)

சு.பள்ளியம்பட்டு, மலப்பாம்பாடி, துர்க்கை நம்மியாந்தல், வேங்கிக்கால், ஆடையூர், தேவனந்தல், அய்யம்பாளையம், அடிஅண்ணாமலை, கோசாலை, நொச்சிமலை, வாணியந்தாங்கல், சோ.கீழ்நாச்சிப்பட்டு, சின்னகாங்கேயனூர், சம்மந்தனூர், நல்லான்பிள்ளை பெட்றான், பள்ளிக்கொண்டாப்பட்டு, கீழ்நாத்தூர், மேலதிக்கான், கீழணைக்கரை, சமுத்திரம், அணைபிறந்தான், அத்தியாந்தல், காவேரியாம்பூண்டி, பண்டிதப்பட்டு, கணந்தாம்பூண்டி, மேல்செட்டிப்பட்டு, கீழ்செட்டிப்பட்டு, நல்லவள்பாளையம், சாவல்பூண்டி, மேல்புத்டியந்தல், சு.கீழ்நாச்சிப்பட்டு, நடுப்பட்டு, கண்ணப்பந்தல், அழகானந்தல், உடையானந்தல், தென்மாத்தூர், கீழ்கச்சிராப்பட்டு, மேல்கச்சிராப்பட்டு, அரசுடையாம்பட்டு, மஞ்சம்பூண்டி, விஸ்வந்தாங்கல், மெய்யூர், நச்சனந்தல், கொளக்குடி, சு.ஆண்டாப்பட்டு, அரடாப்பட்டு, காட்டாம்பூண்டி பாவுப்பட்டு, பறையம்பட்டு, நரியாப்பட்டு, சகக்ரதாமடை, தலையாம்பள்ளம், சு.பாப்பாம்பாடி, தச்சம்பட்டு, அல்லிகொண்டாப்பட்டு, அத்திப்பாடி, பழையனூர், கண்டியன்குப்பம், வளையம்பாக்கம், கல்லொட்டு, நவம்பட்டு, அப்புப்பட்டு, பவித்திரம், பெஇர்யகல்லப்பாடி மற்றும் சின்னகல்லப்பாடு கிராமங்கள்.

திருவண்ணாமலை (நகராட்சி).

கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்றத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *