
திருவாரூர் சட்டமன்றத் தொகுதி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 168வது தொகுதியாக திருவாரூர் தொகுதி உள்ளது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
1977 | தாழை மு.கருணாநிதி
|
திமுக | 38,528 |
1980 | எம். செல்லமுத்து | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 45,557 |
1984 | எம். செல்லமுத்து | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 56,273 |
1989 | வி. தம்புசாமி | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 52,520 |
1991 | வி. தம்புசாமி | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 55,653 |
1996 | ஏ. அசோகன் | திமுக | 69,212 |
2001 | ஏ. அசோகன் | திமுக | 58,425 |
2006 | உ. மதிவாணன் | திமுக | 76,901 |
2011 | மு. கருணாநிதி | திமுக | 1,09,014 |
2016 | மு. கருணாநிதி | திமுக | 1,21,473 |
2019
(இடைத் தேர்தல்) |
கே. பூண்டி கலைவாணன் | திமுக | 1,17,616 |
2021 | கே. பூண்டி கலைவாணன் | திமுக | 1,08,906 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,34,147 | 1,41,992 | 28 | 2,76,167 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
- திருவாரூர் வட்டம்,
- குடவாசல் வட்டம்(பகுதி)
காப்பணமங்கலம், அரசவனங்காடு, தீபங்குடி, கீரங்குடி, புலவநல்லூர், வடகண்டம், மண்ணக்கால், எண்கண், காரையப்பாலையூர், நெய்குப்பை, கீழப்பாலையூர், உத்திரங்குடி, எலையூர், திருக்களம்பூர், செல்லூர், மேல் ஆதிச்சமங்கலம், அர்ப்பார், ஆய்க்குடி, அம்மையப்பன், திருக்கண்ணமங்கை, அகரதிருநல்லூர், காட்டூர், இளவங்கர்குடி, ஆனைவடபாதி, காவனூர், நட்டுவாக்குடி, அத்திசோழமங்கலம், கிருஷ்ணக்கோட்டகம், ஊர்க்குடி, வாழவநல்லூர், புத்தூர், அபிவிருத்தீஸ்வரம், கமுகாகுடி, விஸ்வநாதபுரம், பெருமாள அகரம், நாலில் ஒன்று, மேலதிருமதிக்குண்னம், தியாகராஜபுரம், குளிக்கரை, பெருத்தரக்குடி, தேவர்கண்டநல்லூர், கமலாபுரம், எருக்காட்டூர், பருத்தியூர், கண்கொடுத்தவனிதம், மேலராதாநல்லூர், திட்டாணிமுட்டம், விடயபுரம், முசிரியம், திருவிடைவாசல் மற்றும் களத்தூர் கிராமங்கள், கொரடாச்சேரி (பேரூராட்சி)
நீடாமங்கலம் தாலுக்கா (பகுதி)
வக்ரநல்லூர், சித்தனங்குடி, வெங்காரம்பேரையூர், வடகரை,புனவாசல், பூந்தாழங்குடி, கீழமணலி, ஓகைபேரையூர், அகரவேளுக்குடி, பழையனுர், கொத்தங்குடி, வடகோவனூர், தென்கோவனூர், திருராமேஸ்வரம், மஞ்சனவாடி, ஓவர்ச்சேரி, வெற்குடி சாத்தனூர், காக்கையடி, வடபாதிமங்கலம், ஹரிச்சந்திரபுரம், புள்ளமங்கலம், கிளியனூர், பெரியகொத்தூர், மணக்கரை, பாலக்குறிச்சி, சித்திரையூர், சேந்தங்குடி, குலமாணிக்கம், மாவட்டக்குடி, செருவாமணி மற்றும் மாரங்குடி கிராமங்கள்,
கூத்தாநல்லூர் (நகராட்சி).