துளசியின் மஹாத்மியம் ஸ்ரீ பத்ம புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளனர். தசரத மகாராஜாவுக்கு குழந்தைப்பேறு வேண்டி ராணியுடன் முதலில் துளசி பூஜை செய்ததாக கூறப்படுகிறது.
துளசி தேவி தானே தோன்றி துளசி காஷ்டம் என்ற துளசி குச்சிகளால் புத்திரகாமேஷ்டி யாகம் செய், உங்களுக்கு பகவானே மகனாக பிறப்பான் என்று வரம் கொடுத்தார் என்று கூறப்படுகிறது.
எனவே, துளசி வழிபாடு அனைத்து பாவங்களையும் நீக்குவது மட்டுமல்லாமல், குழந்தை பாக்கியத்தை தரும் என்பது வெளிப்படையானது.
குழந்தையின்மை தம்பதிகள் துளசியை வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
துளசி பூஜை செய்யும் போது, நெல்லி மரத்தின் கிளைகளை (ஸ்ரீ கிருஷ்ணராகக் கருதப்படும்) அதன் அருகில் வைக்க வேண்டும்.
தொடர் வழிபாட்டின் போது நெல்லிக்கிளைகள் வாடுவதால், ஸ்ரீ கிருஷ்ணரின் திருவுருவப்படங்கள் மற்றும் சிலைகளை வைத்து வழிபடலாம்.
மனதில் மகிழ்ச்சி, குடும்பத்தின் மகிழ்ச்சி மற்றும் வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட அமைதியை நீங்கள் காணலாம். துளசி மாதா சகல செல்வங்களையும் தருவாள்.
இதையும் படிக்கலாம் : துளசி பூஜை செய்வது எப்படி?