தீபத்தொளியே திருவே துளசியம்மா
பாபத்தைத் தீர்க்கும் பரிவே துளசியம்மா
கோவிந்தன் உட்பொருளாய்க் கூடி கலந்த அம்மா
மாவிந்தை உன்றன் மகிமைச் சிறப்புமம்மா
செவ்வாய் திருவெள்ளி செல்வி தழைக்க வந்தாய்
உய்வாக என்னாளும் உரிமையில் நீ இருப்பாய்
கைவாய் கனிவதென்ன கருத்தொன்றிப்போன அம்மா
கண்ணன் மனதுவைத்தால் கனிந்துருக வாராயோ
நாபிக் கமலமம்மா நல்லவனின் தேகமம்மா
நான்முகனும் தஞ்சமென நாடியங்கு வீற்றிருப்பான்
கோபி கமலனிகள் கூட்டுதனை விரும்புகின்ற
கோவிந்தன் கொண்டாடும் கொள்கை துளசியம்மா
நாடி விளக்கு வைத்தோம் நறுநெய்யும் ஊற்றி வைத்தோம்
நாயகியே பாருமம்மா நலமே துளசியம்மா
பாடித் துதிக்கின்றோம் பரதேசம் போகாதே
பார்த்து அருள் புரிக பண்பே துளசியம்மா
நல்ல துளசி வைத்தோம் நறும்பூசை
செய்து வைத்தோம்
நல்ல துளசியெனும் வனிதையை
நான் பாடி வைத்தேன்
எல்லாத் திரவியமும்
இனிதாம் தாய் நீயல்லவோ? எங்கள் துளசியம்மா
ஏற்றம் தந்தால் ஆகாதோ?
கோலம் புனைந்தோமே
குங்குமமும் இட்டோமோ
மாலின் பெருமை கொள்ளும்
திருமன் புனைந்தோமே
ஆலும் விழித்தாயாரே
ஆன்ற துளசியம்மா
அனைத்தும் உணர்ந்திருந்தும்
அருகிருந்து காரோயா காப்பாய் துளசியம்மா
கண்ணருள் நீ தந்தருள்க
தீர்ப்பாய் வருவதற்கே
திருவிளக்கைத் தேடி வந்தாய்
பூப்பாய் நீ உண்மையெனப்
பொய்மை கடிபவளே
பூத்ததொரு தாமரை நீ
போற்றி செயும் தீபமடி
என்று ரிஷிகேசர்
இங்கிதமாய்க் கேட்டதற்குத்
தக்க பதிலளித்தாள்
தளிராம் துளசியம்மா
நன்றே துளசியம்மா
நாரணனின் தேவியடி
கன்றாகக் கதறுகின்றோம்
கருதுக நீ துளசியம்மா!
இதையும் படிக்கலாம் : குழந்தைப்பேறு அருளும் துளசி மாதா..!