துளசி வளர்ப்பு எமபயம் போக்கும்..!

வீட்டில் துளசி வளர்த்து வழிபட்டால் வீடு செழிக்கும் என்பது நம்பிக்கை.

ஸ்ரீ கிருஷ்ணருக்கு துளசி மலரை அர்ப்பணம் செய்பவர் பலவிதமான மலர்களைச் சமர்ப்பித்த பலனைப் பெறுவார் என்கிறது ஸ்ரீ பத்ம புராணம்.

ஹரியின் பூஜையில் துளசி இலைகள் சேர்க்கப்படவில்லை என்றால், பூஜையின் முழுப் பலன் நமக்குக் கிடைக்காது.

நிவேதனத்தின் போது சிறிது துளசி இருந்தால் தான் அந்த நிவேதனத்தை இறைவன் ஏற்றுக் கொள்வான். எனவே, துளசி தீர்த்தத்தால் மட்டுமே நிவேதனம் செய்ய வேண்டும்.

துளசி இலையின் உச்சியில் பிரம்மாவும், நடுவில் விஷ்ணுவும், கீழே சிவனும், எஞ்சிய இடத்தில் இரண்டு அசுவினி தேவர்களும், எட்டு வசுக்களும், பதினொரு ருத்திரர்களும், பன்னிரண்டு ஆதித்தியர்களும் இருப்பதாக நம்பப்படுகிறது.

ஸ்ரீ கிருஷ்ணரை துளசியால் அர்ச்சனை செய்பவர் தனது முன்னோர்களை பிறவித்தளையிலிருந்து விடுவிக்கிறார்.

துளசி வனத்தில் பிரவேசிப்பவரது பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தி ஆகிறது.

எந்த வீட்டில் துளசி இருக்கிறதோ அந்த வீட்டில் தீய சக்திகள் தாக்காது. இதனால் தான் வீட்டு முற்றத்தில் துளசி வளர்க்கும் மரபு உருவாக்கப்பட்டது. அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு எம பயம் கிடையாது.

துளசியை வளர்த்து வழிபட்டால் மனம், உடல், உள்ளத்தில் இருந்து செய்த பாவங்கள் நீங்கும்.

இதையும் படிக்கலாம் : துளசி பூஜை செய்வது எப்படி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *