
உதகமண்டலம் சட்டமன்றத் தொகுதி நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 114வது தொகுதியாக உதகமண்டலம் தொகுதி உள்ளது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
1957 | பி. கே. லிங்க கவுடர் | இந்திய தேசிய காங்கிரசு | 22,595 |
1962 | டி. கரிச்சான் | இந்திய தேசிய காங்கிரசு | 32,860 |
1967 | கே. போஜன் | சுதந்திரா கட்சி | 37,525 |
1971 | எம். தேவராஜன் | திமுக | 28,901 |
1977 | ஜி. கோபாலன் | அதிமுக | 18,134 |
1980 | க. கள்ளன் | இந்திய தேசிய காங்கிரசு | 35,528 |
1984 | க. கள்ளன் | இந்திய தேசிய காங்கிரசு | 52,145 |
1989 | எச். எம். ராஜு | இந்திய தேசிய காங்கிரசு | 35,541 |
1991 | எச். எம். ராஜு | இந்திய தேசிய காங்கிரசு | 53,389 |
1996 | டி. குண்டன் | திமுக | 69,636 |
2001 | எச். எம். இராசு | இந்திய தேசிய காங்கிரசு | 59,872 |
2006 | பி. கோபாலன் | இந்திய தேசிய காங்கிரசு | 45,551 |
2011 | புத்திசந்திரன் | அதிமுக | 61,504 |
2016 | இரா. கணேசு | இந்திய தேசிய காங்கிரசு | 67,747 |
2021 | இரா. கணேசு | இந்திய தேசிய காங்கிரசு | 65,450 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 96,730 | 1,05,483 | 7 | 2,02,220 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
2008ஆம் ஆண்டு தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கப்பட்ட இத்தொகுதியின் பகுதிகள்.
- குந்தா வட்டம்
- உதகமண்டலம் வட்டம் (பகுதி)
கடநாடு, எப்பநாடு, கூக்கல், கக்குச்சி, தூனேரி, உல்லத்தி, நஞ்சநாடு, உதகமண்டலம் மற்றும் தும்மனட்டி கிராமங்கள்.
சோலூர் (பேரூராட்சி) மற்றும் உதகமண்டலம் (நகராட்சி) குன்னூர் தாலுக்கா (பகுதி) கேத்தி (பேரூராட்சி).