
உடையவர்க ளேவ ரெவர்களென நாடி
யுளமகிழ ஆசு – கவிபாடி
உமதுபுகழ் மேரு கிரியளவு மான
தெனவுரமு மான – மொழிபேசி
நடைபழகி மீள வறியவர்கள் நாளை
நடவுமென வாடி – முகம்வேறாய்
நலியுமுன மேயு னருணவொளி வீசு
நளினஇரு பாத – மருள்வாயே
விடைகொளுவு பாகர் விமலர்திரி சூலர்
விகிர் தர்பர யோகர் – நிலவோடே
விளவு சிறு பூளை நகுதலையொ டாறு
விடவரவு சூடு – மதிபாரச்
சடையிறைவர் காண உமைமகிழ ஞான
தளர் நடையி டாமுன் – வருவோனே
தவமலரு நீல மலர்சுனைய நாதி
தணிமலையு லாவு – பெருமாளே.
இதையும் படிக்கலாம் : உய்யஞானத்து நெறி (திருத்தணிகை) – திருப்புகழ் 246