உடலி னூடு (திருத்தணிகை) – திருப்புகழ் 244 

உடலி னூடு போய்மீளு முயிரி னூடு மாயாத
உணர்வி னூடு வானூடு – முதுதீயூ

டுலவை யூடு நீரூடு புவியி னூடு வாதாடு
மொருவ ரோடு மேவாத – தனிஞானச்

சுடரி னூடு நால்வேத முடியி னூடு மூடாடு
துரிய வாகு லாதீத – சிவரூபம்

தொலைவி லாத பேராசை துரிச றாத வோர்பேதை
தொடுமு பாய மேதோசொ – லருள்வாயே

மடல றாத வாரீச அடவி சாடி மாறான
வரிவ ரால்கு வால்சாய – அமராடி

மதகு தாவி மீதோடி யுழவ ரால டாதோடி
மடையை மோதி யாறூடு – தடமாகக்

கடல்பு காம காமீனை முடுகி வாளை தான்மேவு
கமல வாவி மேல்வீழு – மலர்வாவிக்

கடவுள் நீல மாறாத தணிகை காவ லாவீர
கருணை மேரு வேதேவர் – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : உடையவர்கள் ஏவர் (திருத்தணிகை) – திருப்புகழ் 245 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *