உடுமலைப்பேட்டை சட்டமன்றத் தொகுதி

உடுமலைப்பேட்டை சட்டமன்றத் தொகுதி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 112வது தொகுதியாக உடுமலைப்பேட்டை தொகுதி உள்ளது.

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள்
1951 மௌனகுருசாமி நாயுடு இந்திய தேசிய காங்கிரசு 19,866
1957 எஸ். டி. சுப்பையா கவுண்டர் சுயேச்சை 18,621
1962 ஆர். இராஜகோபாலசாமி நாய்க்கர் இந்திய தேசிய காங்கிரசு 29,529
1967 எஸ். ஜே. சாதிக்பாட்சா திமுக 39,796
1971 எஸ். ஜே. சாதிக்பாட்சா திமுக 45,369
1977 பி. குழந்தை வேலு அதிமுக 28,737
1980 பி. குழந்தை வேலு அதிமுக 50,570
1984 எஸ். திருமலைசாமி கவுண்டர் இந்திய தேசிய காங்கிரசு 56,004
1989 எஸ். ஜே. சாதிக்பாட்சா திமுக 55,089
1991 கே. பி. மணிவாசகம் அதிமுக 75,262
1996 டி. செல்வராசு திமுக 69,286
2001 சி. சண்முகவேல் அதிமுக 78,938
2006 சி. சண்முகவேல் அதிமுக 66,178
2011 பொள்ளாச்சி ஜெயராமன் அதிமுக 95,477
2016 உடுமலை கே. ராதாகிருஷ்ணன் அதிமுக 81,817
2021 உடுமலை கே. ராதாகிருஷ்ணன் அதிமுக 96,893

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம் ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம் மொத்தம்
2022-ன் படி 1,25,632 1,35,633 25 2,61,290

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

உடுமலைப்பேட்டை வட்டம் (பகுதி)

கொசவம்பாளையம், மூங்கில்தொழுவு, அமந்தக்கடவு, குப்பம்பாளையம், பெரியபட்டி, பூளவாடி, ஆத்துக்கிணத்துப்பட்டி, கொண்டம்பட்டி, குடிமங்கலம், இலுப்பநகரம், அனிக்கடவு, வாகத்தொழுவு, வீடம்பட்டி, விருகல்பட்டி, சோமவாரப்பட்டி, வடுகபாளையம், கோட்டமங்கலம், பொன்னேரி, புக்குளம், தொட்டம்பட்டி, கொங்கல்நகரம், புதுப்பாளையம், பண்ணைக்கிணர், குருஞ்சேரி, சின்னவீரம்பட்டி, பெரியகோட்டை,

உடுமலைபேட்டை (நகராட்சி)

பொள்ளாச்சி வட்டம் (பகுதி)

சோளபாளையம், நல்லம்பள்ளி, சீலக்காம்பட்டி, கோமங்கலம், எஸ்.மலையாண்டிபட்டினம், கோலார்பட்டி, கஞ்சம்பட்டி, தென்குமாரபாளையம், கூலநாய்க்கன்பட்டி, கோமங்கலம்புதூர், சிஞ்சுவாடி, விரல்பட்டி, தாளவாய்ப்பாளையம், தொண்டாமுத்தூர், எஸ்.பொன்னாபுரம், ஊஞ்சவேலாம்பட்டி, ஜாமீன்கோட்டம்பட்டி, கள்ளிப்பட்டி,கொண்டகவுண்டன்பாளையம், மூலனூர், ஆவலப்பம்பட்டி, கொல்லம்பட்டி, ஏ.நாகூர், பூசாரிப்பட்டி, போலிகவுண்டன்பாளையம், ஏரிப்பட்டி, திப்பம்பட்டி, மக்கிளம்பட்டி, நாட்டுக்கல்பாளையம் மற்றும் பழையூர் கிராமங்கள்.

ஜமீன் ஊத்துக்குளி (பேரூராட்சி), சின்னம்பாளையம் (சென்சஸ் டவுன்), குளேஸ்வரன்பட்டி (பேரூராட்சி) மற்றும் சமத்தூர் (பேரூராட்சி).

மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *