உலகபசு பாச தொந்த – மதுவான
உறவுகிளை தாயர் தந்தை – மனைபாலர்
மலசலசு வாச சஞ்ச – லமதாலென்
மதிநிலைகெ டாம லுன்ற – னருள்தாராய்
சலமறுகு பூளை தும்பை – யணிசேயே
சரவணப வாமு குந்தன் – மருகோனே
பலகலைசி வாக மங்கள் – பயில்வோனே
பழநிமலை வாழ வந்த – பெருமாளே.
இதையும் படிக்கலாம் : ஒருபொழுதும் இருசரண (பழனி) – திருப்புகழ் 123