
உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 36வது தொகுதியாக உத்திரமேரூர் தொகுதி உள்ளது. இத் தொகுதி காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
1952 | வி. கே. ராமசாமி முதலியார் | இந்திய தேசிய காங்கிரஸ் | – |
1957 | வி. கே. ராமசாமி முதலியார் | சுயேட்சை | – |
1962 | சீனிவாச ரெட்டியார் | இந்திய தேசிய காங்கிரஸ் | – |
1967 | க. மு. இராசகோபால் | திமுக | – |
1971 | க. மு. இராசகோபால் | திமுக | 48,462 |
1977 | பாகூர் சு. சுப்பிரமணியம் | அதிமுக | 34,877 |
1980 | எஸ். ஜெகத்ரட்சகன் | அதிமுக | 43,303 |
1984 | கே. நரசிம்ம பல்லவன் | அதிமுக | 57,797 |
1989 | க. சுந்தர் | திமுக | 31,304 |
1991 | காஞ்சி பன்னீர்செல்வம் | அதிமுக | 63,367 |
1996 | க. சுந்தர் | திமுக | 66,086 |
2001 | வி. சோமசுந்தரம் | அதிமுக | 73,824 |
2006 | க. சுந்தர் | திமுக | 70,488 |
2011 | பி. கணேசன் | அதிமுக | 86,912 |
2016 | க. சுந்தர் | திமுக | 85,513 |
2021 | க. சுந்தர் | திமுக | 93,427 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,28,157 | 1,37,825 | 46 | 2,66,028 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
- உத்திரமேரூர் வட்டம்
- காஞ்சிபுரம் வட்டம் (பகுதி)
மலையாங்குளம் வள்ளுவப்பாக்கம், பூசிவாக்கம், ஊத்துக்காடு, கட்டவாக்கம், விளாகம், தாழயம்பட்டு, அளவூர், வாரணவாசி, வெம்பாக்கம், சின்னமதுரப்பாக்கம், ஆரம்பாக்கம், தொள்ளாழி, கோசப்பட்டு, தேவரியம்பாக்கம், தோணங்குளம், உள்ளாவூர், பழையசீவரம், நத்தாநல்லூர், புளியம்பாக்கம், வெங்குடி, கீழ் ஒட்டிவாக்கம், சீயமங்கலம், திம்மராஜம்பேட்டை, பாவாசாகிப்பேட்டை, தாங்கி, ஏகனம்பேட்டை, நாயக்கன்பேட்டை, வில்லிவலம், கோயம்பாக்கம், ஏரிவாய், திம்மைய்யன்பேட்டை, முத்தியால்பேட்டை, படப்பம், சின்னய்யங்குளம், கோட்டக்காவல், ஓரிக்கை, கோளிவாக்கம், அய்யங்கார்குளம், புஞ்சரசந்தாங்கல், வளத்தோட்டம், கமுகம்பள்ளம், குருவிமலை, விச்சந்தாங்கல், காலூர், ஆசூர், அவளூர், அங்கம்பாக்கம், தம்மனூர், மேல்புத்தூர், கொளத்தூர், பெருமாநல்லூர், வேடல், களக்காட்டூர், தலையில்லாப்பெரும்பாக்கம், ஆர்ப்பாக்கம், மாகரல், காவாந்தண்டலம், நெல்வேலி, கீழ்புத்தூர், கம்பராஜபுரம், இளையணார்வேலூர், சித்தாத்தூர், மஞ்சமேடு, சூரமேனிக்குப்பம், அயிமிச்சேரி, கோவளமேடு, நாவட்டிக்குளம், திருவங்கரணை, குண்ணவாக்கம், அகரம், தென்னேரி, மடவிளாகம், சிறுபாகல், ஒட்டந்தாங்கல், நாயக்கன்குப்பம், சின்னிவாக்கம், வடவேரிப்பட்டு, மருதம் மற்றும் புத்தகரம் கிராமங்கள்.
தேனம்பாக்கம் (சென்சஸ் டவுன்), ஐயம்பேட்டை (சென்சஸ் டவுன்) மற்றும் வாலாஜாபாத் (பேரூராட்சி).