உயிர்க் கூடு (பழனி) – திருப்புகழ் 121 

உயிர்க்கூடு விடுமளவும் உமைக்கூடி மருவுதொழில்
ஒருக்காலு நெகிழ்வதிலை – யெனவேசூள்

உரைத்தேமுன் மருவினரை வெறுத்தேம திரவியம
துடைத்தாய்பின் வருகுமவ – ரெதிரேபோய்ப்

பயிற்பேசி யிரவுபகல் அவர்க்கான பதமைபல
படப்பேசி யுறுபொருள்கொள் – விலைமாதர்

படப்பார வலைபடுதல் தவிர்த்தாள மணிபொருவு
பதத்தாள மயிலின்மிசை – வரவேணும்

தயிர்ச்சோர னெனுமவுரை வசைக்கோவ வனிதையர்கள்
தரத்தாடல் புரியுமரி – மருகோனே

தமிழ்க்காழி மருதவன மறைக்காடு திருமருகல்
தநுக்கோடி வருகுழகர் – தருவாழ்வே

செயிற்சேல்வி ணுடுவினொடு பொரப்ய்வி மமர்பொருது
செயித்தோடி வருபழநி – யமர்வோனே

தினைக்காவல் புரியவல குறப்பாவை முலைதழுவு
திருத்தோள அமரர்பணி – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : உலகபசு பாச (பழனி) – திருப்புகழ் 122 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *