/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ உய்யஞானத்து நெறி (திருத்தணிகை) - திருப்புகழ் 246

உய்யஞானத்து நெறி (திருத்தணிகை) – திருப்புகழ் 246 

உய்யஞா னத்துநெறி கைவிடா தெப்பொழுது
முள்ளவே தத்துறைகொ – டுணர்வோதி

உள்ளமோ கத்திருளை விள்ளமோ கப்பொருளை
யுள்ளமோ கத்தருளி – யுறவாகி

வையமே ழுக்குநிலை செய்யுநீ திப்பழைய
வல்லமீ துற்பலச – யிலமேவும்

வள்ளியா நிற்புதிய வெள்ளில்தோய் முத்தமுறி
கிள்ளிவீ சுற்றுமலர் – பணிவேனோ

பையரா வைப்புனையு மையர்பா கத்தலைவி
துய்யவே ணிப்பகிர – திகுமாரா

பையமால் பற்றிவளர் சையமேல் வைக்குமுது
நெய்யனே சுற்றியகு – றவர்கோவே

செய்யுமால் வெற்புருவ வெய்யவேல் சுற்றிவிடு
கையமால் வைத்ததிரு – மருகோனே

தெய்வயா னைக்கிளைய வெள்ளையா னைத்தலைவ
தெய்வயா னைக்கினிய – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : எத்தனை கலாதி (திருத்தணிகை) – திருப்புகழ் 247 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *