
வால்பாறை சட்டமன்றத் தொகுதி கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 126வது தொகுதியாக வால்பாறை தொகுதி உள்ளது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
1967 | இ. இராமசாமி | திமுக | 40,945 |
1971 | இ. இராமசாமி | திமுக | 38,779 |
1977 | ஆர். எஸ். தங்கவேலு | அதிமுக | 20,926 |
1980 | ஏ. டி. கருப்பையா | இந்திய பொதுவுடமைக் கட்சி | 46,406 |
1984 | வி. தங்கவேலு | இந்திய தேசிய காங்கிரசு | 48,779 |
1989 | பி. லட்சுமி | அதிமுக | 38,296 |
1991 | எ. சிறீதரன் | அதிமுக | 55,284 |
1996 | வி. பி. சிங்காரவேலு | திமுக | 55,284 |
2001 | கோவை தங்கம் | தமாகா | 47,428 |
2006 | கோவை தங்கம் | இந்திய தேசிய காங்கிரசு | 46,561 |
2011 | மா. ஆறுமுகம் | இந்தியப் பொதுவுடமைக் கட்சி | 61,171 |
2016 | வி. கஸ்தூரி வாசு | அதிமுக | 69,980 |
2021 | தி. கா. அமுல் கந்தசாமி | அதிமுக | 70,672 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 94,325 | 1,03,191 | 21 | 1,97,537 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
- வால்பாறை வட்டம்
- பொள்ளாச்சி வட்டம் (பகுதி)
அம்பராம்பாளையம், ஆத்துப்பொள்ளாச்சி, மார்ச்சிநாயக்கன்பாளையம்,சிங்காநல்லூர், வெக்கம்பாளையம், பெத்தநாயக்கனூர், எஸ்.நல்லூர், பில்சின்னம்பாளையம், சோமந்துறை, தென்சித்தூர், பெரியபோடு, காளியாபுரம், தென்சங்கம்பாளையம், கரியாஞ்செட்டிபாளையம்,ரமணமுதலிபுதூர், கம்மாளப்பட்டி, அர்த்தநாரிபாளையம், ஜல்லிப்பட்டி, தொரையூர் மற்றும் அங்காளகுறிச்சி கிராமங்கள்.
ஆனைமலை (பேரூராட்சி), ஒடையகுளம் (பேரூராட்சி), வேட்டைக்காரன்புதூர் (பேரூராட்சி) மற்றும் கோட்டூர் (பேரூராட்சி).