வனிதை உடல் (பழனி) – திருப்புகழ் 195

வனிதையுடல் காய நின்று வுதிரமதி லேயு ருண்டு
வயிறில்நெடு நாள லைந்து – புவிமீதே

மனிதருரு வாகி வந்து அநுதினமு மேவ ளர்ந்து
வயதுபதி னாறு சென்று – வடிவாகிக்

கனகமுலை மாதர் தங்கள் வலையில்மிக வேயு ழன்று
கனிவதுட னேய ணைந்து – பொருள்தேடிக்

கனபொருளெ லாமி ழந்து மயலில்மிக வேய லைந்த
கசடனெனை யாள வுன்ற – னருள்தாராய்

புனமதனில் வாழு கின்ற வநிதைரகு நாதர் தந்த
புதல்வியித ழூற லுண்ட – புலவோனே

பொருமதனை நீறு கண்ட அரியசிவ னாரு கந்த
புதியமயி லேறு கந்த – வடிவேலா

பனகமணி மாம தங்கி குமரிவெகு நீலி சண்டி
பரமகலி யாணி தந்த – பெருவாழ்வே

பகையசுரர் மாள வென்று அமரர் சிறை மீள வென்று
பழநிமலை மீதி னின்ற – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : வாதம் பித்தம் (பழனி) – திருப்புகழ் 196

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *