மகா விஷ்ணுவின் துணைவியான மகாலட்சுமி வரங்களை அளிப்பதால் வரலட்சுமி என்று அழைக்கப்படுகிறாள். செல்வத்தின் அதிபதியான மஹா லக்ஷ்மியை வீட்டுக்கு வரவேற்கும் நாள் இது.
வரலட்சுமி விரதம் மகாலட்சுமியை வழிபட்டு வேண்டிய வரம் பெறும் சிறப்பு வாய்ந்த விரதம்.
இந்த விரதத்தை திருமணமான மற்றும் திருமணமாகாத கன்னிப்பெண்கள் இருவரும் அனுஷ்டிக்கலாம்.
ஒவ்வொரு வருடமும் வரலக்ஷ்மி விரதத்தைக் கடைப்பிடிக்கும் குடும்பங்களுக்கு வறுமை இருக்காது, திருமணமான பெண்களுக்கும் மாங்கல்ய பலம் கிடைக்கும்.
சில குடும்பங்களில் வரலட்சுமி பூஜை செய்யும் வழக்கம் இல்லை. வழிபடும் பழக்கம் உள்ளவர்கள் வீட்டிற்கு சென்று வழிபடலாம்.
விரதத்தின் முதல் நாளில், வீட்டை சுத்தம் செய்து, பசு மாட்டின் கோமியம் தெளித்து, மாவில் தோரணம் கட்ட வேண்டும். பூஜை அறையில் பலகையை வைத்து அதன் மீது மாக்கோலம் போட வேண்டும்.
மகாலட்சுயின் படம் வைத்து கோலத்திற்கு நடுவில் நெல் பரப்பி தட்டு வைத்து அதன் மீது கலசம் வைத்து, பட்டுப்பாவாடை , நகைகள் போட்டு மஞ்சள், குங்குமம் வைத்து, பூச் சூட்டி, கும்பத்தை அலங்காரம் செய்து கட்டி, கோலமிட்டு மகா லட்சுமிக்கு வரவேற்புக் கொடுத்து வீட்டிற்கு அழைத்து கலசத்தில் ஆராதனை செய்ய வேண்டும்.
மறுநாள் வெள்ளிக்கிழமை விரத நாளில் கும்பத்துடன் நோன்பு சரடை வைத்து, பஞ்சமுக நெய் தீபம் ஏற்றி, கும்பத்திற்கு வெற்றிலை, பாக்கு, பழம், ன்னம் நெய் ஊற்றிய சர்க்கரை பொங்கல், சுண்டல் போன்ற உணவுப் பொருட்களைப் படைக்க வேண்டும்.
வரலட்சுமியின் முன் வைக்கப்படும் நோன்புச்சரட்டை மஞ்சள் குங்குமப்பூவுடன் சேர்த்து கழுத்தில் கட்டிக் கொள்ள வேண்டும்.
வரலட்சுமியிடம் வேண்டிய வரத்தை கேட்டு வரலட்சுமியின் துதிகளைப் பாடி தூப தீப ஆராதனைகளைச் செய்து வர லட்சுமியை வழிபாடு செய்ய வேண்டும்.
பூஜையின் போது அஷ்ட லட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி ஸ்தோத்திரம் பாராயணம் செய்ய வேண்டும்.
சுமங்கலி பெண்கள் விரதத்தின் போது தாலிக்கயிற்றை வைத்து பூஜை செய்து அதனை அணிந்து கொள்ள வேண்டும்.
பெண்கள் வரலட்சுமி விரதம் இருந்தால் அஷ்டலட்சுமிகளும் மகிழ்ச்சி அடைவார்கள். இதனால் மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும். திருமண தோஷம் உள்ள கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும்.
வயதான சுமங்கலிகளுக்கு மாங்கல்ய பலம் அதிகம். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 8 ஆம் வீடு, 8 ஆம் அதிபதி மற்றும் 8 ஆம் கிரகம் ஆகியவை ஆயுட்காலம் மற்றும் மாங்கல்ய பலத்தை தீர்மானிக்கும்.
8ம் வீட்டு அதிபதி சுபக்கிரகத் தொடர்புகளால் வலுப்பெற்று இருந்தால், அந்தப் பெண் தன் கணவனுடன் தீர்க்க சுமங்கலியாக தனது சொந்த பந்தங்களுடன் நீண்ட நெடுங்காலம் வாழ்வார்.
மேலும் செவ்வாய், சுக்கிரன் வலுப்பெற்றால் லட்சுமி கடாட்சமாக விளங்குவார். இத்தகைய அம்சம் நிறைந்த சுமங்கலிகளிடம் வரலட்சுமி நோன்பு அன்று ஆசி பெற்றால் எத்தகைய திருமணத்தடையும் அகலும். மாங்கல்ய பலம் அதிகரிக்கும்.
எனவே, வயதான சுமங்கலிப் பெண்களை பூஜைக்கு அழைத்து வெற்றிலை பாக்கு, பாக்கு, பழங்கள், மஞ்சள், குங்குமம், கண்ணாடி வளையல் போன்றவற்றை அன்னதானம் செய்து ஆசி வழங்குவது மிகவும் விசேஷம். மறுநாள் புனர் பூஜை செய்து விரதத்தை முடிக்க வேண்டும்.
ஒவ்வொரு வருடமும் இந்த பூஜையை செய்தால் லட்சுமி உங்கள் வீடு தேடி வருவாள்.
பிஸியான வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கும். இது ஆண்டு முழுவதும் வசந்த காலம். லட்சுமி கவசம் பாடி வழிபாடு செய்தால் பணத்தேவைகள் நிறைவேறும்.
இதையும் படிக்கலாம் : லட்சுமி தேவி வீடுதேடி வர வேண்டுமா..?