16 வகை செல்வத்தையும் வழங்கக்கூடிய மகாலட்சுமி தேவியை நினைத்து இருப்பது வரலட்சுமி விரதம். மங்களத்தையும், மாங்கல்ய பலத்தையும் அளிக்கக்கூடிய இந்த விரதத்தை கன்னிப் பெண்களும், திருமணமான சுமங்கலி பெண்கள் கடைப்பிடிக்க வேண்டும்.
வரலட்சுமி பூஜைக்கு முன் விநாயகர் பூஜை செய்ய வேண்டும். வரலட்சுமி பூஜையை மனநிறைவோடு செய்ய வேண்டும். ஒன்பது முடிச்சு இருக்கும் நோன்புக்கயிறு அவசியம். அம்மன் அலங்காரம் செய்த உடன் முடிக்கயிறு தயாரிக்கும் போது 9 முடிச்சுகள் போட்டிருக்க வேண்டும். வெள்ளிக்கிழமை காலையில் நல்ல நேரத்தில் முடிச்சு போட வேண்டும். அஷ்ட லட்சுமிகளுடன் வரலட்சுமியை சேர்த்து 9 லட்சுமிகள் என்பதை குறிக்கும் வகையில் 9 முடிச்சு கொண்ட நோன்பு கயிறு கட்டிக்கொள்கின்றனர். வயது மூத்த சுமங்கலிகள் கைகளால் நோன்பு கயிற்றை கட்டிக்கொள்ள வேண்டும்.
இந்த மந்திரத்தை உச்சரித்து வலது கையில் நோன்பு கயிறை கட்டிக்கொள்ள வேண்டும்.
“நவதந்து ஸமாயுக்தம் நவக்ரந்தி ஸமன்விதம்
பத்னீயாம் தட்சிணே ஹஸ்தே தோரகம் ஹரிவல்லபே”
மந்திரத்தின் அர்த்தம்
நாராயணின் மனைவியான மகாலட்சுமியே ஒன்பது இழைகளும் ஒன்பது முடிச்சும் கொண்ட இந்த மஞ்சள் கயிற்றினை பிரசாதமாக ஏற்று வலது கையில் கட்டிக்கொள்கிறேன். எனக்கு நீ அருள்புரிய வேண்டும் என்று சொல்லி வணங்க வேண்டும்.
வரலட்சுமி பூஜை செய்ய நல்ல நேரம்
வரலட்சுமியை நினைத்து பக்தியுடனும் மகிழ்ச்சியுடனும் வழிபட வேண்டும். சுமங்கலி பெண்களை வரலட்சுமி பூஜைக்கு கட்டாயம் அழைக்க வேண்டும். வரலட்சுமி விரதத்தை காலையில் ஆரம்பித்தாலும் மாலையில் பூஜை செய்யலாம். மாலையில் வீட்டில் தீபம் ஏற்றி பூஜையைத் தொடங்குவது சிறந்தது.
ஒவ்வொரு வருடமும் வரலக்ஷ்மி விரதம் அனுஷ்டித்தால், திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணமும், திருமணமான பெண்களுக்கு மாங்கல்ய பலமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் கிடைக்கும்.
இதையும் படிக்கலாம் : வரலட்சுமி விரத ஸ்லோகம்