வசனமிக ஏற்றி (பழனி) – திருப்புகழ் 192

வசனமிக வேற்றி – மறவாதே
மனதுதுய ராற்றி – லுழலாதே

இசைபயில்ஷ டாக்ஷ – ரமதாலே
இகபரசெள பாக்ய – மருள்வாயே

பசுபதிசி வாக்ய – முணர்வோனே
பழநிமலை வீற்ற – ருளும்வேலா

அசுரர்கிளை வாட்டி – மிகவாழ
அமரர்சிறை மீட்ட – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : வஞ்சனை மிஞ்சி (பழனி) – திருப்புகழ் 193

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *