சுத்தம் சோறு போடும் என்பதை போல் நாம் உபயோகப்படுத்தும் காய் நறுக்கும் பலகையிலும் சுகாதாரம் பேணாவிட்டால் உடல் நலக் குறைவு உண்டாகும். எனவே அதனை எப்படி பராமிக்கலாம் என்பதுதான் இங்கே பார்க்கிறோம்.
நாம் நல்ல காய்கறிகளை தேர்ந்தெடுத்து சமைக்கிறோம். ஆனால் சமைக்கும் நேரம், நறுக்கும் முறை, மற்றும் உபயோகப்படுத்தும் கத்தி, பலகையில் கூட சத்துக்கள் விரயம், மற்றும் கிருமித் தொற்று உண்டாகும் அபாயம் இருக்கிறது.
சின்ன சின்ன விஷயங்கள் நாம் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லதுதானே. நாம் உபயோகப்படுத்துகின்ற நறுக்கும் பலகையிலும் நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இருக்கிறது. என்னவென்று பார்க்கலாம்.
கண்ணாடி பலகை
கண்ணாடி பலகை எளிதில் சுத்தம் பண்ணிடலாம். கறை, நாற்றம் உண்டாகாது. ஆனால் எச்சரிக்கையாக இல்லாவிட்டால் கத்தி நம் கையை பதம் பார்த்து விடும். அதனை பாதுகாப்பாக பயன்படுத்துவதும் முக்கியம்.
இறைச்சிக்கு ஒரே பலகையா?
இறைச்சி மற்றும் காய்களை நறுக்கவும் ஒரே பலகையை உபயோகப்படுத்துதல் கூடாது. இறைச்சியிலிருந்து உருவாகும் சால்மோனெல்லா, ஈகோலை போன்ற நுண்கிருமிகள் பலகையிலேயே தங்கிவிட வாய்ப்புண்டு. இதனால் தொற்று நோய்கள், மற்றும் வயிற்று உபாதைகள் வரக் கூடும். ஆகவே இறைச்சியை நறுக்க தனியாக பலகையை பயன்படுத்த வேண்டும்
பலகையை எப்படி கழுவுகிறீர்கள்
பிளாஸ்டிக் பலகையை உபயோகப்படுத்தினால் கழுவிய பின் பாத்திரங்கள் வடிகட்டும் டப்பில் போடலாம். ஆனால் மரப்பலகையை அவ்வாறு போடக் கூடாது. உடனடியாக கழுவி வெயிலில் காய வைக்க வேண்டும். சமையல் சோடாவைப் பயன்படுத்தி பலகைகளை கழுவினால் நாற்றம் இல்லாமல் சுத்தமாக இருக்கும்.
காய வைக்காமல் இருந்தால்
பலகையை நன்றாக உலர வைக்காமல் இருந்தால் அதில் வாசம் மற்றும் கிருமிகள் தங்கும் வாய்ப்புகள் அதிகம் அதனால் கட்டாயம் நன்றாக காய வைத்தே உபயோகப்படுத்தினால் தொற்றுக்கள் உருவாகாமல் தடுக்க முடியும்.
பலகையில் வெட்டுக்கள் தடுக்க
பலகையில் நறுக்கும் போது அதில் வெட்டுக்கள் உண்டாகாமல் தடுக்க முடியாது. அந்த வெட்டுக்களில் அழுக்குகள் சேர்ந்து அவை கிருமிகள் பெருக வழியை தரும். அந்த வெட்டுக்கள் உருவாகாமல் தடுக்க, பலகையில் எண்ணெய் தடவி காய சில நிமிடங்களுக்கு பிறகு நறுக்கினால் வெட்டுக்கள் உண்டாகாது.
இதையும் படிக்கலாம் : விஷமாகும் குடிநீர் பாட்டில்கள்..!