வெம் சரோருகமோ (திருச்செந்தூர்) – திருப்புகழ் 103 

வெஞ்ச ரோருக மோகடு நஞ்ச மோகய லோநெடு
வின்ப சாகர மோவடு – வகிரோமுன்

வெந்து போனபு ராதன சம்ப ராரிபு ராரியை
வென்ற சாயக மோகரு – விளையோகண்

தஞ்ச மோயம தூதுவர் நெஞ்ச மோவெனு மாமத
சங்க மாதர்ப யோதர – மதில்மூழ்கு

சங்கை யோவிரு கூதள கந்த மாலிகை தோய்தரு
தண்டை சேர்கழ லீவது – மொருநாளே

பஞ்ச பாதக தாருக தண்ட னீறெழ வானவர்
பண்டு போலம ராவதி – குடியேறப்

பங்க யாசனர் கேசவ ரஞ்ச லேயென மால்வரை
பங்க நீறெழ வேல்விடு – மிளையோனே

செஞ்ச டாடவி மீமிசை கங்கை மாதவி தாதகி
திங்கள் சூடிய நாயகர் – பெருவாழ்வே

செண்ப காடவி நீடிய துங்க மாமதிள் சுழ்தரு
செந்தில் மாநகர் மேவிய – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : அகல்வினை (பழனி) – திருப்புகழ் 104 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *