வெங்கா ளம்பா ணஞ்சேல் கண்பால்
மென்பா கஞ்சொற் – குயில்மாலை
மென்கே சந்தா னென்றே கொண்டார்
மென்றோ ளொன்றப் – பொருள்தேடி
வங்கா ளஞ்சோ னஞ்சீ னம்போய்
வன்பே துன்பப் – படலாமோ
மைந்தா ருந்தோள் மைந்தா அந்தா
வந்தே யிந்தப் – பொழுதாள்வாய்
கொங்கார் பைந்தே னுண்டே வண்டார்
குன்றாள் கொங்கைக் – கினியோனே
குன்றோ டுஞ்சூ ழம்பே ழுஞ்சூ
ரும்போய் மங்கப் – பொருகோபா
கங்கா ளஞ்சேர் மொய்ம்பா ரன்பார்
கன்றே வும்பர்க் – கொருநாதா
கம்பூர் சிந்தார் தென்பால் வந்தாய்
கந்தா செந்திற் – பெருமாளே.
இதையும் படிக்கலாம் : வெம் சரோருகமோ (திருச்செந்தூர்) – திருப்புகழ் 103