வேப்பமரத்தின் இலை, வேர், காய், பழம், பூ மற்றும் வேர் என அனைத்து பாகத்திலும் மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கு அதனாலதான் நமது முன்னோர்கள் வீட்டுக்கு ஒரு வேப்பமரத்தை வளர்த்து வந்தாங்க.
வேப்ப மரத்தில் உள்ள பாகங்களுக்கு மருத்துவ குணங்கள் நிறைய இருந்தாலும் வேப்பம் பூவுக்கு ஒரு தனி சிறப்பு இருக்குனு தான் சொல்லணும்.
Contents
வேப்பம் பூவின் மருத்துவ குணங்கள்
- சுடு தண்ணில வேப்பம்பூவை போட்டு ஆவி புடிச்சோம்னா தலைவலி தலையில நீர் கோர்த்து இருக்கிற பிரச்சனை சரியாயிடும்.
- வேப்பம் பூவை டீயா குடிக்கிறதுனால வயிறு பிரச்சனை மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையை சரிப்படுத்தும்.
- வேப்பம் பூவை மென்னு சாப்பிடறதுனால ஏப்பம் பசியில்லை மற்றும் வாய் தொல்லையை சரிப்படுத்தும்.
- வேப்பம்பூவை சட்னியாவோ அல்லது ரசமாவோ வெச்சு சாப்பிடுறதுனால குமட்டல் வாந்தி மயக்கம் போன்ற பிரச்சனைகளை சரியாக்கும்.
- பித்தம் தெளிய வேப்பம்பூவை தண்ணீரில் ஊறவைத்து குடிச்சிட்டு வரணும்.
- வேப்பம்பூவில் இருக்கிற கசப்பு குடலில் உள்ள புழுக்களை அளித்து குடலை சுத்தப்படுத்தும்.
இதையும் படிக்கலாம் : மலர்களும் மருந்தாகும்