வெற்றி செயவுற்ற (திருத்தணிகை) – திருப்புகழ் 302 

வெற்றிசெய வுற்றகழை விற்குதைவ ளைத்துமதன்
விட்டகணை பட்ட – விசையாலே

வெட்டவெளி யிற்றெருவில் வட்டபணை யிற்கனல்வி
ரித்தொளிப ரப்பு – மதியாலே

பற்றிவசை கற்றபல தத்தையர்த மக்குமிசை
பட்டதிகி ரிக்கு – மழியாதே

பத்தியையெ னக்கருளி முத்தியைய ளித்துவளர்
பச்சைமயி லுற்று – வரவேணும்

நெற்றிவிழி பட்டெரிய நட்டமிடு முத்தமர்நி
னைக்குமன மொத்த – கழல்வீரா

நெய்கமல மொக்குமுலை மெய்க்குறவி யிச்சையுற
நித்தமிறு கத்த – ழுவுமார்பா

எற்றியதி ருச்சலதி சுற்றியதி ருத்தணியில்
எப்பொழுது நிற்கு – முருகோனே

எட்டசல மெட்டநில முட்டமுடி நெட்டசுரர்
இட்டசிறை விட்ட – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : அதிரும் கழல் (குன்றுதோறாடல்) – திருப்புகழ் 303 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *