விடமடைசு வேலை (விநாயகர்) – திருப்புகழ் 5

விடம் அடைசு வேலை அமரர்படை சூலம்
விசையன்விடு பாணம் – எனவேதான்

விழியும் அதி பார விதமும் உடை மாதர்
வினையின் விளை வேதும் – அறியாதே

கடி உலவு பாயல் பகல் இரவெ னாது
கலவிதனில் மூழ்கி – வறிதாய

கயவன் அறி வீனன் இவனும் உயர் நீடு
கழல் இணைகள் சேர – அருள்வாயே

இடையர்சிறு பாலை திருடிகொடு போக
இறைவன்மகள் வாய்மை – அறியாதே

இதயமிக வாடி உடையபிளை நாத
கணபதி என் நாம – முறைகூற

அடையலவர் ஆவி வெருவ அடி கூர
அசலும் அறி யாமல் – அவர்ஓட

அகல்வதென டாசொல் எனவுமுடி சாட
அறிவருளும் ஆனை – முகவோனே.

இதையும் படிக்கலாம் : முத்தைத்தரு (திருவருணை) – திருப்புகழ் 6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *