விநாயகருக்கு அனைத்து அபிஷேகப் பொருட்களும் உகந்தது. இருப்பினும், சில இடங்களில், ஒரு சில அபிஷேகப் பொருட்கள் மட்டும் குறிப்பாகச் சிறப்பித்து செய்யப்பெறுகின்றன.
திருவலஞ்சுழி வெள்ளை விநாயகருக்குப் பச்சைக் கற்பூரம் மட்டுமே சார்த்தப்பட்டு வருகின்றது.
பாலாபிஷேகம்
வேலூருக்கு அருகில் உள்ள சேண்பாக்கம் என்னும் சிற்றூரில் பால விநாயகருக்குத் தாமரை தண்டு கொண்ட வெண்ணெய் தீபம் ஏற்றி பாலாபிஷேகம் செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
சந்தன அபிஷேகம்
தென்சேரிகிரி (செஞ்சேரிமலை என்று அழைக்கப்படுகிறது) மலையடிவாரத்தில் எழுந்தருளியுள்ள விநாயகருக்கு சந்தன அபிஷேகம் செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
பரணி, ரோகிணி புனர்பூசம், அஸ்தம், மூலம் ஆகிய நட்சத்திர நாட்களில் இந்த விநாயகருக்கு சந்தன அபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பு.
தேனாபிஷேகம்
திருப்போரம்பய தலத்தில் சிப்பி ஓடு போன்ற ஓடுகளால் செய்யப்பட்ட விநாயகர் தேன் அபிஷேகத்திற்கு மிகவும் பிடித்தமானவர். இவருக்கு எவ்வளவு தேன் அபிஷேகம் செய்தலும் கீழே வழிந்தோடாமல் அனைத்தும் விநாயகர் வடிவுக்குள் போவதை காணலாம்.
திருநீற்று அபிஷேகம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு எதிரே உள்ள பொற்றாமரைக் குளத்தின் தென்மேற்கு மூலையில் அமைந்துள்ள விநாயகர் திரு நீற்று விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். அங்கு வரும் பக்தர்கள் அனைவரும் அவருக்கு தம் கைகளால் விபூதி அபிஷேகம் செய்கிறார்கள்.
மகம், உத்திரம், விசாகம், கேட்டை, பூராடம் போன்ற நட்சத்திர நாட்களில் இந்த விநாயகருக்கு திருநீறு அபிஷேகம் செய்வதால் நினைத்த காரியம் நிறைவேறும்.
கஸ்தூரி மஞ்சள் அபிஷேகம்
மிருக சீரிஷம், பூரம், அனுஷம் ஆகிய நட்சத்திர நாட்களில் விநாயகருக்கு கஸ்தூரி மஞ்சள் அபிஷேகம் செய்தால் வெற்றி கிடைக்கும்.
அன்ன அபிஷேகம்
பூர நட்சத்திர நாளில் விநாயகருக்கு அன்ன அபிஷேகம் செய்து வழிபட்டால் வீடு செழிக்கும்.
சொர்ணாபிஷேகம்
திருவோணம் நட்சத்திர நாளில், விநாயகருக்கு சொர்ணாபிஷேகம் செய்ய செல்வம் கொழிக்கும்.
இதையும் படிக்கலாம் : பிள்ளையாருக்கு ரொம்ப பிடிச்ச 6 பழங்கள்