விநாயகர் பெருமானுக்கு உரிய மூன்று விரதங்களான வெள்ளிக்கிழமை விரதம், விநாயகர் சதுர்த்தி விரதம், ஒவ்வொரு மாத வளர்பிறை சதுர்த்தி விரதம் ஆகும்.
சதுர்த்தி விரதம்
பார்வதி தேவி விநாயகப் பெருமானைப் போற்றி விரதம் இருந்ததாக வரலாறு கூறுகிறது. விநாயகர் சதுர்த்திக்குப் பிறகும் விரதம் இருக்க வேண்டும், அடுத்த சங்கடஹ சதுர்த்தி அன்று முடிக்க வேண்டும். இயலாதவர்கள் விநாயகர் சதுர்த்தியன்று ஒரு நாள் மட்டுமாவது கடைபிடிக்க வேண்டும்.
விநாயகர் சதுர்த்தியன்று, களிமண் பிள்ளையாரை மா கோலமிட்ட மணல் பலகையில் வைக்கப்பட்டு, அவருக்குப் பிடித்த எருக்கம் மலர்கள், அருகம்புல் மற்றும் பிற மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, ஆடைகள், ஒற்றை பூணூ இட்டு மற்றும் வண்ணமயமான குடையுடன் விநாயகப் பெருமானுக்கு மிகவும் விருப்பமான அப்பம், மோதகம், கொழுக்கட்டை, பாயாசம், சுண்டல் மற்றும் பழ வகைகள் முதலியவற்றை நெய்வேத்தியங்களாக வைத்து விநாயகர் துதி சொல்லி அன்போடு விநாயகரை நாம் துதிக்க நமக்கு பூர்ன மன நலம், உடல் நலம் வாழ்வில் சகல வளமும் கிடைக்கும்.
இதையும் படிக்கலாம் : விநாயகர் துதிகள் பாடல்கள்