விந்ததில் ஊறி (திருச்செந்தூர்) – திருப்புகழ் 100

விந்ததி னூறி வந்தது காயம்
வெந்தது கோடி – யினிமேலோ

விண்டுவி டாம லுன்பத மேவு
விஞ்சையர் போல – அடியேனும்

வந்துவி நாச முன்கலி தீர
வண்சிவ ஞான – வடிவாகி

வன்பத மேறி யென்களை யாற
வந்தருள் பாத – மலர்தாராய்

எந்தனு ளேக செஞ்சுட ராகி
யென்கணி லாடு – தழல்வேணி

எந்தையர் தேடு மன்பர்ச காய
ரெங்கள்சு வாமி – யருள்பாலா

சுந்தர ஞான மென்குற மாது
தன்றிரு மார்பி – லணைவோனே

சுந்தர மான செந்திலில் மேவு
கந்தசு ரேசர் – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : விறல்மாரன் ஐந்து (திருச்செந்தூர்) – திருப்புகழ் 101

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *