விராலிமலை சட்டமன்றத் தொகுதி

விராலிமலை சட்டமன்றத் தொகுதி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 179வது தொகுதியாக விராலிமலை தொகுதி உள்ளது.

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள்
1971 வீ. சா. இளஞ்செழியன் திமுக 41,813
2011 சி. விஜயபாஸ்கர் அதிமுக 77,285
2016 சி. விஜயபாஸ்கர் அதிமுக 84,701
2021 சி. விஜயபாஸ்கர் அதிமுக 1,02,179

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம் ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம் மொத்தம்
2022-ன் படி 1,08,583 1,10,667 13 2,19,263

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

  • இலுப்பூர் தாலுக்கா (கோமங்கலம் கிராமம் தவிர)
  • குளத்தூர் தாலுக்கா (பகுதி)

குமாரமங்கலம், மாத்தூர், சிங்கத்தாக்குறிச்சி, செங்கலாக்குடி , மண்டையூர், லெட்சுமணபட்டி, மேட்டுபட்டி, சிவகாமிபுரம், தென்னதிராயன்பட்டி, பாலாண்டாம்பட்டி, களமாவூர், நீர்ப்பழனி, ஆம்பூர்பட்டி , மதயாணைப்பட்டி, சூரியூர், பேராம்பூர் , ஆலங்குடி, வெம்மணி, வடுகபட்டி, மேலப்புதுவயல், குளத்தூர் மற்றும் ஒடுக்கூர் கிராமங்கள்.

மணப்பாறை தாலுக்கா (பகுதி) (திருச்சிராப்பள்ளி மாவட்டம்) ** கவிநாரிப்பட்டி, புத்தாக்குடி, கப்பக்குடி கிராமங்கள். (**கவிநாரிப்பட்டி, புத்தாக்குடி, கப்பக்குடி, ஆகிய கிராமங்கள் திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகத்தின் கீழ்வந்தாலும், கள மற்றும் பூகோள ரீதியாக விராலிமலை சட்டமன்ற தொகுதியின் எல்லைப்பரப்பிற்குள் வருகிறது).

புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *