
விருதுநகர் சட்டமன்றத் தொகுதி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 206வது தொகுதியாக விருதுநகர் தொகுதி உள்ளது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் |
1952 | வி. வி. ராமசாமி | சுயேட்சை | – |
1967 | பெ. சீனிவாசன் | திமுக | – |
1971 | பெ. சீனிவாசன் | திமுக | – |
1977 | எம். சுந்தரராஜன் | அதிமுக | 33,077 |
1980 | எம். சுந்தரராஜன் | அதிமுக | 40,285 |
1984 | ஏ. எஸ். ஏ. ஆறுமுகம் | ஜனதா | 42,852 |
1989 | ஆர். சொக்கர் | இந்திய தேசிய காங்கிரசு | 34,106 |
1991 | சஞ்சய் ராமசாமி | சரத்சந்திர சின்ஹா
இந்திய காங்கிரஸ் (சமத்துவம்) கட்சி |
53,217 |
1996 | ஏ. ஆர். ஆர். சீனிவாசன் | திமுக | 47,247 |
2001 | எஸ். தாமோதரன் | தமாகா | 49,413 |
2006 | ஆர். எம். வரதராஜன் | மதிமுக | 50,629 |
2011 | கே. பாண்டியராஜன் | தேமுதிக | 70,104 |
2016 | ஏ. ஆர். ஆர். சீனிவாசன் | திமுக | 65,499 |
2021 | ஏ. ஆர். ஆர். சீனிவாசன் | திமுக | 73,297 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் | ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் | மொத்தம் |
2022-ன் படி | 1,07,215 | 1,12,533 | 48 | 2,19,796 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
விருதுநகர் தாலுக்கா (பகுதி)
செங்கோட்டை, எல்லிங்கநாயக்கம்பட்டி, வடமலைக்குறிச்சி, சிவஞானபுரம், புல்லலக்கோட்டை, நந்திரெட்டிபட்டி,பாவாலி,அல்லம்பட்டி, சத்ரரெட்டியபட்டி, பெரிய பரலி, சின்னமூப்பன்பட்டி, பேளம்பட்டி, பாவாலி, சீனியாபுரம், செங்குன்றாபுரம், மூளிப்பட்டி, கவுண்டன்பட்டி, நாட்டார்மங்கலம், பி.குமாரலிங்கபுரம், விருதுநகர், அழகாபுரி,மீசலூர், ஆமத்தூர், வெள்ளூர், ஆனைக்குட்டம், ஏ.மீனாட்சிபுரம், மேலாமத்தூர், காரிசேரி, ஒண்டிப்புலி நாயக்கனூர், தாதம்பட்டி, புளியங்குளம், மருளுத்து, பட்டம்புதூர், வாய்பூட்டான்பட்டி, காசிரெட்டியபட்டி, பாச்சாகுளம், வி.முத்துலிங்காபுரம், சொக்கலிங்கபுரம், வாடியூர், கன்னிசேரிபுதூர், தம்மநாயக்கன்பட்டி, வச்சக்காரப்பட்டி, கலங்காபேரி மற்றும் சின்னவாடி கிராமங்கள்.
ரோசல்பட்டி (சென்சஸ் டவுன்), விருதுநகர் (நகராட்சி) மற்றும் கூரைக்குண்டு (சென்சஸ் டவுன்).
சிவகாசி தாலுக்கா (பகுதி)
எரிச்சநத்தம், சேவலூர், புதுக்கோட்டை, காளையார் குறிச்சி, மங்கலம், தச்சகுடி, நெடுங்குளம், பூரணசந்திரபுரம், மற்றும் கீழதிருத்தங்கல் கிராமங்கள்.
அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதி