/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ விஷமாகும் கடை இட்லி-தோசை மாவு..!! - Thagavalkalam

விஷமாகும் கடை இட்லி-தோசை மாவு..!!

vishamaakum-kadai-idli-dosa-maavu

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இட்லி, தோசை மாவை விலைக்கு விற்கும்  பழக்கம் விரிவடைந்து கொண்டே போகிறது.

இட்லி, தோசை மாவு விற்கப்படுவதால் ஒரு புறம் பெண்களின் வேலைச்சுமை குறைகிறது. மறுபுறம் வீட்டில் இருந்தபடியே பணம் ஈட்டும் தொழிலாக மாவு விற்பனை நடைபெறுகிறது.!

மேலும் சிறிய மளிகைக்கடை முதல் பெரிய ஷாப்பிங் மால் வரை இட்லி, தோசை மாவு பாக்கெட்டுகளில் கிடைக்கிறது இன்று.!

நவீன விஞ்ஞான உலகமாம். அம்மாக்களே உங்க சோம்பேறித்தனம் தான் இந்த கேவலமான நிலைக்கு காரணம்.

ஆட்டுகல்லில் (குடை கல்) மாவு ஆட்டும் காலம் கடந்து, வெட்கிரைண்டர் வாங்கி கொடுத்து ஏன்யா இந்த நிலை.

இந்த நிலைக்கு All Gentleman’s தான் மிக முக்கிய காரணம். வீட்டிலேயே மாவை ஆட்ட சொல்லுங்க அன்பு நண்பர்களே.

கடையில் விற்கும் மாவு ஒரு உயிர்கொல்லி ஸ்லோ பாய்ஸன் என்பது ஏனோ பலருக்கும் தெரிவதில்லை.

இதன் பின் விளைவுகளை சற்று அலசிப்பார்த்தால் நம் உதிரமும் உறைந்து போகும் அளவிற்கு அதிபயங்கரமான விளைவுகள் தெரிய வருகின்றது.

  • 6 நாட்கள் வரை புளிப்பு வாசனை வராமல் இருக்க, நம் உடலில் ஏற்படும் காயத்திற்கும், புண்ணிற்கும், கேரம் போர்ட் விளையாட பயன்படுத்தும் BoricAcid, ஆரோட்மாவு போன்றவற்றைக் கலந்து விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.
  • அதாவது ஒரு நாளைக்கு 3 – 6 மணி நேரம் அரைக்க வேண்டிய கிரைண்டர்கள், 12- 18 மணி நேரம் தொடர்ந்து ஓட்டுவதால் அந்த கல் கொஞ்சம் கொஞ்சமாக தேய்மானம் ஏற்பட்டு மாவுடன் கலந்து விடுகின்றது. இதனால் சிறுநீரகத்தில் கல் உண்டாகும் அபாயம் இருக்கின்றது.
  • என்னதான் நல்ல அரிசி உளுந்து போட்டாலும் நல்ல தண்ணீரை ஊற்றி தான் மாவு அரைக்க வேண்டும். ஆனால் பெரும்பாலும் உவர்தன்மையைக் கொண்ட கிணத்தடி தண்ணீர் மற்றும் உப்பு தண்ணிரே பயன்படுத்தப்படுகின்றது.!
  • நம் முன்னோர்கள் இட்லிக்கு மாவு அரைக்கும் போது ஒரு கை வெந்தயத்தை போட்டு அரைப்பார்கள். வெந்தயம் ஒரு இயற்கையான நோய் நிவாரணி (ஆண்டிபயாடிக்) இது, உடம்பு உஷ்னம், வாய் நாற்றம், குடல் புண் (அல்சர்) போன்ற நோய்களைத் தடுக்கும் ஆற்றல் உள்ளது.
  • கடை மாவில் யாரும் வெந்தயத்தை சேர்ப்பதில்லை. மேலும், பால், தயிறு, முட்டை, காய்கறி, மாட்டிறைச்சிகளில் கானப்படும் ஈகோலி (E-COLI) எனப்படும் ஒருவகை பாக்டீரியாவானது, (– 24°) மைனஸ்24 டிகிரிக்கு கீழே இருந்தால் தான் கொஞ்சமாவது கட்டுபடும் அவ்வகை பாக்டீரியாக்கள் மாவுகளில் உருவாகி சிலருக்கு சாப்பிட்டவுடன் ஃபுட் பாயிஸன் என்றும், சிலருக்கு ஸ்லோ பாய்ஸனாக உடலில் கலந்து உயிரையேக் கொல்லும் அபாயமும் உள்ளது.
  • எனவே, நமக்கு நன்கு தெரிந்த கலப்படம் செய்யாத நேர்மையானவர்கள் அரைத்து விற்பனை செய்யும் இட்லி,தோசைமாவுகளை மட்டும் வாங்குவதோடு, முன், பின் தெரியாதவர்கள் தயாரித்து கடைகளில் விற்கும் மாவுகளை முற்றிலுமாகத் தவிர்ப்பது நலமும், உங்களை நீங்களே பாதுகாப்பதும் கூட.
  • வீட்டிலேயே மாவை தயார் செய்யுங்கள், நலம் நம் கையில்.

இதையும் படிக்கலாம் : ஃப்ரைடு ரைஸ் அடிக்கடி சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *