கோடை காலம் என்றாலே நமது நினைவுக்கு வருவது தர்பூசணி பழமாகத் தான் இருக்கும். வெயில் காலத்தில் அதிக வியர்வையால் நமது உடலில் நீர்ச்சத்துக்கள் குறைந்து விடும். தர்பூசணிப்பழம் சாப்பிட்டால் நீரேற்றமாக இருக்கலாம்.
தர்பூசணி பழத்தில் 92% தண்ணீர் உள்ளது. மேலும் பலவித வைட்டமின்கள், தாதுக்கள் போன்ற சத்துக்களும் இதில் நிறைந்துள்ளது. மேலும் பலவித வைட்டமின்கள், தாதுக்கள் போன்ற சத்துக்களும் இதில் நிறைந்துள்ளது. எனவே இதை வெயில் காலத்தில் சாப்பிடுவதால் நமது உடலுக்கு பல வித நன்மைகள் கிடைக்கும்.
தர்பூசணியில் லைகோபீன் என்கிற முக்கிய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. மேலும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதில் தர்பூசணியின் பங்கு அதிகம்.
இதயத்தை பாதுகாக்க
தர்பூசிணியில் 11% விட்டமின் எ, 13% விட்டமின் சி மற்றும் பொட்டாசியம் இருக்கிறது. இது மாரடைப்பு வராமல் பாதுகாக்கிறது. மேலும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தி
தர்பூசணிப் பழத்தில் 16% வைட்டமின் சி முழுமையாக உள்ளது. இது உடலில் உள்ள வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை எளிதாக்குகிறது. மேலும் இவை பல்வேறு தொற்றுகளை எதிர்த்துப் போராடுகிறது. கோடை காலத்தில் சளி பிடிக்க வாய்ப்பு இருப்பதால், தர்பூசணி நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவும்.
சிறுநீரக பிரச்சனைக்கு
தர்பூசிணியை சாப்பிடுவதால் சிறுநீரகங்கள் சிறப்பாக செயலாற்றுவதோடு, நீர் தரைகளில் ஏற்படும் அடைப்பு, நீர் சுருக்கு போன்ற நோய்கள் ஏற்படுவதை தடுக்கிறது.
இதையும் படிக்கலாம் : சிறுநீரகம் செயலிழக்க வைக்கும் உணவுகள்
கர்ப்பிணிக்கு நல்லது
கர்ப்பகாலத்தில் தர்பூசிணி பழத்தை சாப்பிடுவதால் உயர் இரத்த அழுத்ததை கட்டுப்படுத்தும் மேலும் குழந்தையின் வளர்ச்சிக்கு மிகவும் நல்லது.
மலச்சிக்கல் சரிசெய்யும்
மலச்சிக்கல் பிரச்சனைக்கு காரணம் நார்ச்சத்து குறைந்த உணவுகளையும் மாவுச்சத்து மிகுந்த உணவுகளை சாப்பிடுவதோடு வயிற்றில் நீர்ச்சத்து குறைவதாலும் ஏற்படுகிறது.
தர்பூசிணியில் நீர்ச்சத்து மற்றும் நீர் சத்து அதிகம் இருப்பதால் இவை மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்கிறது.
இதையும் படிக்கலாம் : கோடை காலத்தில் இந்த உணவு சாப்பிடுவதை தவிருங்கள்
சரும பாதுகாப்பு
தர்பூசிணியில் உள்ள விட்டமின் சி மற்றும் பீட்டாகரோட்டின் இரண்டும் ஆன்டி ஆக்சிடண்டுகளாக செயல்பட்டு சருமத்தில் கோலாஜின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதனால் சருமத்தில் ஏற்படும் வறட்சி, வெடிப்புகள், சரும சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது.
கண் ஆரோக்கியம்
தர்பூசணி பழத்தில் பீட்டா கரோட்டின், லுடீன், வைட்டமின் சி மற்றும் ஜியாக்சாண்டின் நிறைந்துள்ளது. இந்த தர்பூசணியை சாப்பிடுவதால் கண் சார்ந்த நோய்களைத் தடுப்பதிலும், பார்வை நரம்புகள் மற்றும் கண்கள் வறண்டு போவதையும் தடுக்கிறது. மேலும் இதை உட்கொள்வதால் கண்களின் ஆரோக்கியம் மேம்படும்.
உடல் நலத்தை மேம்படுத்தும்
தர்பூசணியில் சிட்ரூலின் என்கிற மூலப்பொருள் உள்ளது. இது உடல் செயல்பாடுகளுக்கு தேவையான அமினோ அமிலங்களின் பயன்பாட்டை மேம்படுத்துவதற்கு உதவுகிறது. மேலும் உடல் வளர்ச்சிக்கு தேவையான ஹார்மோன் அளவை அதிகரிக்க உதவுகிறது.
இதையும் படிக்கலாம் : செவ்வாழை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!