பொதுவாக நமது உடலும் மூளையும் தூக்கத்தின் மூலம் ஓய்வெடுக்கிறது, ஆனால் நாம் விழித்திருக்கும் போது கூட மூளை அதிகம் வேலை செய்யாது, தூங்கும் போது தான் அது அதிகமாக வேலை செய்கிறது.
தூக்கத்தின் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, “விரைவான கண் அசைவு” தூக்கத்தின் இறுதி நிலை என்று கூறப்படுகிறது. அப்போது கண் விழியன் அசைவு அதிகமாக இருக்கும். அந்த சமயம், நம் மூளையில் ரசாயன திரவங்கள் சுரப்பதால், கனவுகள் தோன்றும். அவர்களில் ஒரு சிலருக்கு ஒன்றரை மணி நேரத்திற்கு ஒரு முறை கனவுகள் வரும். கனவுகளுக்கு இதுவே முக்கிய காரணம் என்றும் கூறலாம்.
மேலும் கனவுகள் என்று வரும் போது, பலருக்கு நல்ல கனவுகளை விட கெட்ட கனவுகள் அதிகம் வரும். சிலர் நன்றாக தூங்கும் போது, யாரோ ஒருவர் தங்கள் உடலை அழுத்துவது போலவும், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவது போலவும் உணர்கிறார்கள். இதைத்தான் தூக்க முடக்கம் என்று சொல்கிறார்கள்.
சராசரி மனிதன் ஒரு இரவில் ஏழு மணி நேரத்திற்கும் மேலாக தூங்குகிறான், ஏழு வகையான கனவுகளை காண்கிறான். ஆனால் இந்த ஏழு கனவுகளை நினைவுபடுத்தும் அளவுக்கு நமது மூளைக்கு நினைவாற்றல் இல்லை.
பொதுவாக, கனவுகள் மனிதர்களுக்கு மட்டுமல்ல, நம் வீடுகளில் வளரும் நாய்கள் மற்றும் பூனைகள் போன்ற பல்வேறு விலங்குகளுக்கும் வருகிறது. பொதுவாக பெண்களுக்கு வர கூடிய கனவுகளில் இருபாலரும் சம அளவில் இருப்பார்கள். ஆனால் ஆண்கள் காணும் கனவுகளில் ஆண்கள் தான் அதிகமாக இருப்பார்கள்.
இதையும் படிக்கலாம் : கனவில் தெய்வங்கள் வந்தால் என்ன பலன் தெரியுமா?