விநாயகர் சதுர்த்தி முடிந்ததும் வழிபட்ட விநாயகரை ஆற்றில் சென்று கரைத்து விடுவார்கள். இதற்கான காரணத்தை கீழே பார்க்கலாம்.
நம் முன்னோர்கள் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்பட்ட முறைதான் இந்த களிமண் விநாயகர். ஆடி மாதத்தில் ஆற்றல் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய காரணத்தால் மண்ணரிப்பு அதிகம் ஏற்படும்.
இதனை யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள் என்பதன் காரணமாக நம் முன்னோர்கள் நீர் ஆற்றில் தங்குவதற்கு களிமண்ணை ஆற்றில் கரைத்தால் அந்த மண் ஆற்றில் கரைந்து ஆற்று நீரை தடுத்து நிலத்தடி நீரை உயர்த்திவிடும். அதனால் தான் ஆடி மாதம் முடிந்து அதற்கு அடுத்த மாதமான ஆவணி மாத சதுர்த்தியை விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடி வந்துள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி அன்று களிமண்ணால் செய்யப்பட்ட பிள்ளையார் சிலைகளை செய்து அவற்றை வணங்கி வழிபாடு செய்து விட்டு ஆற்றில் கரைத்தனர். இப்படி ஒவ்வொரு வீட்டிலும் இருந்து களிமண்ணால் உருவாக்கப்பட்ட விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைக்கும் பொழுது அந்த இடத்தில் நீர் கீழே பூமியுள் உறிஞ்சப்பட்டு நிலத்தடி நீர் அதிகரிக்கும்.
விநாயகர் சதுர்த்தி அன்று களிமண்ணால் செய்யப்பட்ட பிள்ளையார் சிலைகள் ஆரம்பத்தில் ஈரப்பதத்தோடு இருக்கும் அதை அன்றே கரைத்தால் நீரில் எளிதாகக் கரைந்து விடும் எனவே விநாயகர் சிலையை மூன்று நாட்கள் வைத்து வழிபாடு செய்யும்போது அந்தக் களிமண் கெட்டியாக மாறிவிடும்.
அந்தக் கெட்டியான களிமண் ஆற்றில் கரைக்கும்போது மண் ஆற்றில் கரைந்து அப்படியே நீரில் அடியில் தங்கிவிடும். அதனால் நீர் அந்த இடத்தில் தடுக்கப்பட்டு களிமண்ணால் உறிஞ்சப்பட்டு நிலத்தடியில் தங்கிவிடும். அதனால் தான் நமது முன்னோர்கள் விநாயகர் சதுர்த்தியின் போது விநாயகர் சிலைகளை களிமண்ணால் செய்து ஆற்றில் கரைத்து வந்திருக்கிறார்கள்.
இதையும் படிக்கலாம் : விநாயகருக்கு உகந்த அருகம்புல் வழிபாடு