/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ எந்தெந்த விரல்களால் விபூதியை தொடலாம்? - Thagavalkalam

எந்தெந்த விரல்களால் விபூதியை தொடலாம்?

கோவிலுக்கு சென்று இறைவனை வழிபடும்போது, அங்கே அர்ச்ச‍கர் நமக்கு விபூதியும், குங்குமமும் அளிப்பார். அப்ப‍டி அளிக்க‍ப்படும் விபூதியை வாங்கி நெற்றியில் இடும்போது, நாம் அதை எப்ப‍டி, எந்தெந்த‌ விரல்களால் எடுத்து நெற்றியில் இடுகிறோம் என்பதை நம்மில் பலருக்கு தெரிவதில்லை.

விபூதியை எடுக்க‍ சில‌ விரல்களை பயன்படுத்தும் போதும் தீமையும், சில விரல்களை பயன்படுத்தும் போது அதீத நன்மைகளும் ஏற்படும். ஆகவே விபூதி எடுக்கும்போது, கீழே குறிப்பிட்டுள்ள‍ முறைகளை பயன்படுத்தி, மிகவும் கவனமாக எடுத்து அணியவேண்டும்.

வலது கைய்யில் வாங்கிய விபூதி

ஒரு போதும் இடது கைய்யில் கொட்ட கூடாது வலது கைய்யில் விபூதியைய் வைத்து கொண்டு தான் நெற்றியில் இட்டு கொள்ள வேன்டும்

ஒரு போது எந்த விதமான நியூஸ் பேப்பரிலும் விபூதியைய் மடித்து கொள்ள கூடாது நியூஸ் பேப்பரில் என்ன எழுதி உள்ளதோ அதன் படி தீய என்னங்கள் வரும் ஆகையால் வெள்ளை நிறம் காகிதத்தில் நம்முடைய இஷ்ட தெய்வத்தின் நாமத்தை எழுதி அதனில் விபூதி வைத்து கொள்வது உத்தமம்.

கட்டை விரல்

கட்டை விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் தீராத வியாதி வரும்.

ஆள் காட்டி விரல்

ஆள் காட்டி விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் பொருட்கள் நாசம்.

நடுவிரல்

நடுவிரலால் விபூதியை தொட்டு இட்டுக்கொண்டால் நிம்மதியின்மை உண்டாகும்.

மோதிர விரல்

மோதிர விரலால் விபூதி தொட்டுக்கொண்டு அணிந்தால் மகிழ்ச்சியான வாழ்க்கை.

சுண்டு விரல்

சுண்டு விரலால் விபூதி தொட்டு அணிந்தால் கிரகதோஷம் எற்படும்.

மோதிர விரல் – கட்டை விரல்

மோதிர விரலாலும், கட்டை விரலாலும் சேர்த்து விபூதியை எடுத்து மோதிர விரலால் விபூதி இட்டுக் கொண்டால் உலகமே வசப்படம். எடுக்கும் முயற்சி வெற்றி பெரும்

இங்கே விளக்கப்படுவது பிரசாதமாக பெற்ற விபூதியைப்ப்பற்றி மட்டுமே. விபூதி குழைத்து விடுவதற்கு வலது கரத்தில் கொஞ்சம் விபூதி எடுத்துக்கொண்டு சிறிது தண்ணீர் சேர்த்து இடது கை விரல்களால் குழைத்து பின்னர் வலது கை ஆள்காட்டிவிரல், நடுவிரல் மற்றும் மோதிர விரல்களால் நெற்றியிலும் இரண்டுகரங்கள், தோள்பட்டை முதுகு வயிறு போன்ற இடங்களில் இட்டுக்கொள்ளவேண்டும். இடதுகை விரல்களினால் வலது கரத்தின் மணிக்கட்டு, முழங்கை புஜம் போன்ற இடங்களில் இட்டுக்கொள்ளலாம்.

இதையும் படிக்கலாம் : மோதிரம் எந்த விரலில் அணியலாம்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *