எந்த நட்சத்திரக்காரர்கள் எந்த தெய்வத்தை வணங்கனும்..?

which-god-to-worship-according-to-nakshatra

ஒவ்வொரு ராசிக்கும் ராசி அதிபதி, அந்த ராசிக்குள் இருக்கும் நட்சத்திரங்களுக்கு அதிபதி என்று தெய்வங்கள் ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

எந்த நட்சத்திரக்காரர்கள் எந்த தெய்வத்தை வணங்கனும்

அஸ்வினி

சரஸ்வதியை சந்தன எண்ணெய் சாற்றி வழிபட வேண்டும்.

பரணி

துர்க்கை அம்மனை பச்சரிசி மாவால் அபிஷேகம் செய்ய வேண்டும்.

கார்த்திகை

நெய்யால் அக்னீஸ்வரரை அபிஷேகிக்க வேண்டும்.

ரோகிணி

பிரம்மதேவனை மஞ்சள்பொடியால் அபிஷேகம் செய்ய வேண்டும்.

மிருகசீரிஷம்

வாசனை திரவியங்கள் கலந்த மஞ்சள் பொடி கொண்டு, சந்திர பகவானை அபிஷேகித்து வர வேண்டும்.

திருவாதிரை

அதிகாலை வேளையில் பஞ்ச கவ்யம் கொண்டு சிவலிங்கத்தை அபிஷேகம் செய்ய வேண்டும்.

புனர்பூசம்

பஞ்சாமிர்தத்தால் ஸ்ரீராமபிரானின் திருமேனியை அபிஷேகிக்க வேண்டும்.

பூசம்

பசும் பால் அல்லது மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளை பாலுடன் கலந்து பாலாமிர்தமாக குரு பகவானை அபிஷேகம் செய்ய வேண்டும்.

ஆயில்யம்

ஆதிசேஷன் அல்லது நாகம்மனை பசும்பால் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.

மகம்

சூரியநாராயணரை, வெள்ளிக்கிழமைகளில் சுத்தமான பசுநெய் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.

பூரம்

பசுத் தயிர் கொண்டு அம்மனை அபிஷேகம் செய்ய வேண்டும்.

உத்திரம்

தேனால், மகாலட்சுமிதேவியை அபிஷேகிக்க வேண்டும்.

அஸ்தம்

காயத்ரி தேவியை, தேன் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.

சித்திரை

கரும்புச்சாறு கொண்டு சக்கரத்தாழ்வாரை அபிஷேகம் செய்ய வேண்டும்.

சுவாதி

நரசிம்ம பெருமாளை, பானகம் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.

விசாகம்

பழச்சாறு கொண்டு முருகப்பெருமானை அபிஷேகிக்க வேண்டும்.

அனுஷம்

இளநீர் கொண்டு லட்சுமிநாராயணரை அபிஷேகம் செய்ய வேண்டும்.

கேட்டை

இந்திர லிங்கத்திற்கு பசு சாண விபூதியால் அபிஷேகம் செய்ய வேண்டும்.

மூலம்

ஆஞ்சநேயருக்கு சந்தனத்தால் அபிஷேகம் செய்ய வேண்டும்.

பூராடம்

பசும்பால் அல்லது வில்வ இலை கொண்டு ஜம்புகேஸ்வரரை அபிஷேகம் செய்ய வேண்டும்.

உத்திராடம்

சிவலிங்கத்திற்கு வில்வ இலை அபிஷேகம் அல்லது செப்பு பாத்திரத்தில் துளையிட்டு, சொட்டு சொட்டாக நீர் லிங்கத்தின் மீது படுவதுபோல் செய்ய வேண்டும்.

திருவோணம்

செப்பு பாத்திர நீர் வழியும் வகையில் மகாவிஷ்ணுவை அபிஷேகம் செய்ய வேண்டும்.

அவிட்டம்

துளசி இலையால் அனந்த சயனப் பெருமாளை அபிஷேகிக்க வேண்டும்.

சதயம்

பன்னீர் கொண்டு மிருத்யுஞ்சேஸ்வரரை அபிஷேகம் செய்ய வேண்டும்.

பூரட்டாதி

தங்கப் பாத்திரத்தில் வைக்கப்பட்ட தீர்த்தம் கொண்டு குபேரனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.

உத்திரட்டாதி

வெள்ளி பாத்திரத்தில் வைக்கப்பட்ட தீர்த்தம் கொண்டு சிவலிங்கத்தை அபிஷேகம் செய்ய வேண்டும்.

ரேவதி

ஐந்துவகையான தீர்த்தம் கொண்டு சனீஸ்வரரை அபிஷேகிக்க வேண்டும்.

எந்த நட்சத்திரக்காரர்கள் எந்த தெய்வத்தை வணங்கனும் என்பதை தெரிந்து கொண்டு அந்த தெய்வத்தின் அருளை பெற்று வாழ்வில் நலம் பெறுவோம்.

இதையும் படிக்கலாம் : எந்த ராசிக்காரர் எந்த உணவு சாப்பிட வேண்டும் தெரியுமா..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *