நம்மில் பலரும் போன் லெஸ் வகையிலான சதை பகுதி இறைச்சிகளை தான் விரும்பி சாப்பிடுவோம். அதில் ருசியும் கொழுப்பும் மட்டும் தான் இருக்கிறதே தவிர மற்றபடி பெரிதாய் எந்த ஆரோக்கியமும் இல்லை.
ஆனால், உறுப்பு பகுதி இறைச்சிகளான குடல், ஈரல், மூளை, கணையம், மண்ணீரல் போன்றவற்றில் பல ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன.
முக்கியமாக இவற்றில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி12, புரதம், இரும்புச்சத்து, கிரோமியம், ஃபோலிக் அமிலம் போன்ற உங்கள் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் அதிகமான அளவில் கிடைகின்றன. மற்றும் உங்களது சீரான உடல் இயக்கத்தையும் இது ஊக்குவிக்கிறது.
சரி இனி வெறும் சதை இறைச்சியை உண்பதை விட உறுப்பு பகுதிகளை உண்பதன் மூலம் கிடைக்கின்ற ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்துகொள்வோம்.
மூளை
மூளையில் உயர்ரக ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தின் சத்து இருக்கிறது. ஃபாஸ்ஃபேடிடில்செரீன் மற்றும் ஃபாஸ்ஃபேடிடில்சொலின் போன்ற நரம்புக்கு வலிமை அளிக்கும் ஊட்டச்சத்துகள் மூளையில் இருந்து கிடைகின்றன. இவை, மூளை மற்றும் முதுகெலும்பிற்கு வலு சேர்க்கிறது.
இதயம்
இதய உறுப்பு இறைச்சியில் செலினியம், வைட்டமின் பி2, பி6, பி12 மற்றும் துத்துநாகம் போன்ற சத்துகள் இருக்கின்றன. இது உடலில் இருக்கும் செல்களுக்கு வலிமை அளிக்கிறது.
ஈரல்
உறுப்பு இறைச்சிகளில் மிகவும் வலிமைமிக்கது ஈரல் தான். இதில் உயர்த்தர புரதம், வைட்டமின் எ, ஃபோலிக் அமிலம், கிரோமியம் போன்ற ஊட்டச்சத்துகள் இருக்கின்றன. ஈரல் இதயத்திற்கு வலு சேர்க்கிறது மற்றும் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது.
சிறுநீரகம்
ஆடு அல்லது மாட்டின் சிறுநீரகம் சாப்பிடுவதனால் ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தின் சத்து கிடைக்கிறது. மற்றும் இதை சாப்பிடுவதன் மூலம் நிறைந்த புரதச்சத்து கிடைக்கிறது. இதை சாப்பிடுவதன் மூலம் உங்கள் இதயத்திற்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.
கணையம்
மற்றும் மண்ணீரல் கணையத்தில் நிறைய செலினியம் மற்றும் துத்தநாகம் சத்துகள் இருக்கின்றன. இது உங்கள் ஹார்மோன் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மிகவும் அவசியமானது ஆகும். மற்றும் இவை செரிமான பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்கும்.
இதையும் படிக்கலாம் : அடிக்கடி மட்டன் சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?