ஏற்காடு சட்டமன்றத் தொகுதி

ஏற்காடு சட்டமன்றத் தொகுதி சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இது மலைவாழ் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட தனி தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 83வது தொகுதியாக ஏற்காடு தொகுதி உள்ளது.

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள்
1957 எஸ். ஆண்டி கவுண்டன் இந்திய தேசிய காங்கிரசு 23,864
1962 எம். கொழந்தசாமி கவுண்டர் இந்திய தேசிய காங்கிரசு 19,921
1967 வ. சின்னசாமி திமுக 25,124
1971 வ. சின்னசாமி திமுக 29,196
1977 ஆர். காளியப்பன் அதிமுக 20,219
1980 திருமன் அதிமுக 28,869
1984 பி. ஆர். திருஞானம் இந்திய தேசிய காங்கிரசு 48,787
1989 சி. பெருமாள் அதிமுக 26,355
1991 சி. பெருமாள் அதிமுக 59,324
1996 வி. பெருமாள் திமுக 38,964
2001 கே. டி. இளயக்கண்ணு அதிமுக 64,319
2006 சி. தமிழ்செல்வன் திமுக 48,791
2011 சி. பெருமாள் அதிமுக 1,04,221
ஏற்காடு சட்டமன்ற இடைத்தேர்தல் 2013 பெ.சரோஜா அதிமுக 1,42,771
2016 கு. சித்ரா அதிமுக 1,00,562
2021 கு. சித்ரா அதிமுக 1,21,561

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம் ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம் மொத்தம்
2022-ன் படி 1,37,419 1,43,547 12 2,80,978

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

  • ஏற்காடு வட்டம்
  • வாழப்பாடி வட்டம்

சேலம் வட்டம் (பகுதி)

சுக்கம்பட்டி, தாதனூர், மூக்கனூர், கதிரிப்பட்டி, ஆச்சாங்குட்டப்பட்டிபுதூர், அமரனூர், ஆச்சாங்குட்டபட்டி, குப்பனூர், வெள்ளையம்பட்டி, வலசையூர், பள்ளிப்பட்டி, தாசநாயக்கன்பட்டி, உடையார்பட்டி, வேடப்பட்டி, டி.பெருமாள்பாளையம், மேட்டுப்பட்டிதாதனூர், சின்னனூர், தைலானூர், அதிகாரப்பட்டி, வீராணம், கோரத்துபட்டி மற்றும் கற்பகம் கிராமங்கள்,

ஆத்தூர் வட்டம் (பகுதி)

நெய்யமலை, தும்பல், மலையாளப்பட்டி, அருணா (ஆர்.எப்), சின்னகல்ராயன் மலை (தெற்குநாடு), சின்னகல்ராயன் மலை (வடக்குநாடு), தும்பல் விரிவாக்கம் (ஆர்.எப்) மற்றும் தும்பல் (ஆர்.எப்.) கிராமங்கள்.

ஓமலூர் சட்டமன்றத் தொகுதி 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *