சிவராத்திரியில் மகா சிவராத்திரி, யோக சிவராத்திரி, நித்திய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி என ஐந்து வகை உண்டு.
சிவனுக்கு உகந்த ராத்திரியான சிவராத்திரி ஐந்து வகைகளைக் கொண்டது. அவை மகா சிவராத்திரி, யோக சிவராத்திரி, நித்திய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி எனப்படும். இந்த ஐந்து வகையான சிவராத்திரிகளை அறிந்து கொள்ளுங்கள்.
மகா சிவராத்திரி
மாசி மாதத்தில் வரும் தேய்பிறை, கிருஷ்ணபட்ச சதுர்த்தசி அன்று வருவது மகா சிவராத்திரி. அன்று விரதம் இருப்பவர்கள் முக்தியை அடைவார்கள்.
யோக சிவராத்திரி
திங்கட்கிழமை அமாவாசை யோக சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது.
நித்திய சிவராத்திரி
நித்திய சிவராத்திரி எனப்படும் தேய்பிறை சதுர்த்தசி 12, வளர்பிறை சதுர்த்தசி 12 என ஆண்டு முழுவதும் 12 மாதங்களில் 24 சிவராத்திரி விழாக்கள் நடைபெறுகின்றன.
பட்ச சிவராத்திரி
தை மாதத்தில், தேய்பிறை பிரதமை திதியில் இருந்து 13 நாள் வரையில், நியமத்துடன் ஒரு பொழுது மட்டும் உணவு உண்டு, 14-வது நாளான சதுர்த்தசி அன்று உபவாசம் இருப்பது பட்ச சிவராத்திரியாகும்.
மாத சிவராத்திரி
மாத சிவராத்திரி ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு முந்தைய சதுர்த்தசி திதியில் வருகிறது. இவற்றில் நீங்கள் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு மற்றும் ஐந்து என அவரவர் சக்திக்கு ஏற்ப கடைபிடிப்பதால் அதற்க்கான பலன் கிடைக்கும்.
இதையும் படிக்கலாம் : சிவராத்திரி சிறப்பு பற்றிய தகவல்கள்