சக்தி பீடங்கள் அம்பிகையின் உடற்கூறுகள் விழுந்த இடமே சக்தி பீடமானது. அவ்வாறு 51 இடங்களில் சக்தியின் உடல்கள் விழுந்தன.
51 சக்தி பீடங்கள், பாரத நாட்டில் 43 பீடங்களும் பங்களாதேஷ் நாட்டில் 2 பீடங்களும், நேபாளத்தில் 3 பீடங்களும், தீபெத்தில் 2 பீடங்களும், பாகிஸ்தானில் 1 பீடமும் அமைந்துள்ளது மிகவும் சக்தி வாய்ந்த இப்பீடங்களுக்கு யாத்திரை மேற்கொள்வது அம்பிகையின் பரிபூரண திருவருளைப் பெற வழி வகுக்கும்.
சக்தி பீடங்கள் தோன்றிய வரலாறு
பிரம்ம புத்திரனான தட்சன் ஆயிரம் ஆண்டுகள் கடும்தவம் புரிந்து சர்வேஸ்வரான சிவபெருமானிடம் “பிரஜாபதி பட்டத்துடன் ஈரேழு உலகங்களையும் ஆளும் வல்லமையை வரமாக பெற்றான் அத்துடன் ஜெகன் மாதாவான அம்பிகையை புதல்வியாக அடையும் வரத்தை வேண்டி பெற்றான்.
எண்ணற்ற ஆண்டுகள் அனைத்து உலகங்களையும் ஆட்சி செலுத்திய மமதையில் அகங்காரம் மேலிட தானே ஈஸ்வரன் என எண்ண துவங்கினான். தர்ம நெறியில் இருந்து முற்றிலும் விலகி செயல்பட்டான். வரமளித்த இறைவனிடத்தில் பகைமை கொண்டு பரம்பொருளான சிவபெருமானையே அவமதிக்கும்படி யாகமும் தொடங்கினான்.
ஹரித்வாரில் அமைந்துள்ள ‘கனகல்’ என்ற தலத்தில் யாகம் தொடங்கப்பட்டது. அன்னை பார்வதி தேவி தட்சனுக்கு அறிவு புகட்ட எண்ணி, யாகசாலையில் தோன்றினார் தட்சனோ தேவியை அவமதித்து பேசியதுடன் ஈசனையும் நிந்தித்து பேசினான். சிவனை நிந்திப்பதை பொறுக்காத தேவி ஹோமகுண்டத்தில் விழுந்து உடலை மாய்த்து கொண்டார் ஆனால் தீயால் மாளாத தேவி உயிர் இன்றி விழுந்து கிடந்தார்.
இந்நிகழ்ச்சியால் சிவபெருமான் கோபம் கொண்டு தட்சணையும், யாக சாலையையும், அதற்கு உடன் இருந்தவர்களையும் அளித்ததாக சிவபுராணங்கள் கூறுகின்றன.
இறைவனின் அருளால் ஆட்டின் தலையுடன் மீண்டும் தட்சன் உயிர்த்து எழுந்தான்.
சிவபெருமான் சதிதேவியின் திருவுடலை சுமந்தபடி உக்கிரதாண்டவம் ஆடத்துவங்க, மகாபிரளயம் உருவாகும் அபாயம் தோன்றியது. ஸ்ரீ மகாவிஷ்ணு சர்வேஸ்வரரை அமைதியுற செய்யும் பொருட்டு, தன் சுதர்சன சக்கரத்தால் தேவியின் திருவுடலை பல்வேறு துண்டுகளாக அகண்ட இப்பூமியில் சிதறும்படி செய்தார் அவை 51 சக்தி பீடங்களாக உருவாகின.
51 சக்தி பீடங்கள்
- மூகாம்பிகை – கொல்லூர்(அர்த்தநாரி பீடம்), கர்நாடகா
- காமாட்சி – காஞ்சிபுரம்(காமகோடி பீடம்), தமிழ்நாடு
- மீனாட்சி – மதுரை(மந்திரிணி பீடம்), தமிழ்நாடு
- விசாலாட்சி – காசி(மணிகர்ணிகா பீடம்), உ.பி.
- சங்கரி – மகாகாளம்(மகோத்பலா பீடம்), ம.பி.
- பர்வதவர்த்தினி – ராமேஸ்வரம்(சேது பீடம்), தமிழ்நாடு
- அகிலாண்டேஸ்வரி – திருவானைக்கா(ஞானபீடம்), தமிழ்நாடு
- அபீதகுஜாம்பாள் – திருவண்ணாமலை(அருணை பீடம்), தமிழ்நாடு
- கமலாம்பாள் – திருவாரூர்(கமலை பீடம்), தமிழ்நாடு
- பகவதி – கன்னியாகுமரி(குமரி பீடம்), தமிழ்நாடு
- மகாகாளி – உஜ்ஜையினி(ருத்ராணி பீடம்), ம.பி.
- மங்களாம்பிகை – கும்பகோணம்(விஷ்ணு சக்தி பீடம்), தமிழ்நாடு
- வைஷ்ணவி – ஜம்மு(வைஷ்ணவி பீடம்), காஷ்மீர்
- நந்தா தேவி – விந்தியாசலம்(விந்தியா பீடம்), மிர்ஜாப்பூர்
- பிரம்மராம்பாள் – ஸ்ரீ சைலம்(சைல பீடம்), ஆந்திரா
- மார்க்கதாயினி – ருத்ரகோடி(ருத்ரசக்தி பீடம்), இமாசலபிரதேஷ்
- ஞானாம்பிகை – காளஹஸ்தி(ஞான பீடம்), ஆந்திரா
- காமாக்யா – கவுகாத்தி(காமகிரி பீடம்), அஸ்ஸாம்
- சம்புநாதேஸ்வரி – ஸ்ரீநகர்(ஜ்வாலாமுகி பீடம்) காஷ்மீர்
- அபிராமி – திருக்கடையூர்(கால பீடம்), தமிழ்நாடு
- பகவதி – கொடுங்கலூர்(மகாசக்தி பீடம்), கேரளா
- மகாலட்சுமி – கோலாப்பூர்(கரவீரபீடம்), மகாராஷ்டிரம்
- ஸ்தாணுபிரியை – குரு÷க்ஷத்ரம்(உபதேசபீடம்), ஹரியானா
- மகாகாளி – திருவாலங்காடு(காளி பீடம்), தமிழ்நாடு
- பிரதான காளி – கொல்கத்தா(உத்ர சக்தி பீடம்), மேற்கு வங்காளம்
- பைரவி – பூரி(பைரவி பீடம்), ஒரிசா
- மாணிக்காம்பாள் – திராக்ஷõராமா(மாணிக்க பீடம்), ஆந்திரா
- அம்பாஜி – துவாரகை – பத்ரகாளி(சக்தி பீடம்), குஜராத்
- பராசக்தி – திருக்குற்றாலம்(பராசக்தி பீடம்), தமிழ்நாடு
- முக்தி நாயகி – ஹஸ்தினாபுரம்(ஜெயந்தி பீடம்), ஹரியானா
- லலிதா – ஈங்கோய் மலை,குளித்தலை(சாயா பீடம்), தமிழ்நாடு
- காயத்ரி -ஆஜ்மீர் அருகில் புஷ்கரம்(காயத்ரிபீடம்) ராஜஸ்தான்
- சந்திரபாகா – சோமநாதம்(பிரபாஸா பீடம்), குஜராத்
- விமலை, உலகநாயகி – பாபநாசம்(விமலை பீடம்), தமிழ்நாடு
- காந்திமதி – திருநெல்வேலி(காந்தி பீடம்), தமிழ்நாடு
- பிரம்மவித்யா – திருவெண்காடு(பிரணவ பீடம்), தமிழ்நாடு
- தர்மசம்வர்த்தினி – திருவையாறு(தர்ம பீடம்), தமிழ்நாடு
- திரிபுரசுந்தரி – திருவொற்றியூர்(இஷீபீடம்), தமிழ்நாடு
- மகிஷமர்த்தினி – தேவிபட்டினம்-(வீரசக்தி பீடம்), தமிழ்நாடு
- நாகுலேஸ்வரி – நாகுலம்(உட்டியாணபீடம்), இமாசல பிரதேசம்
- திரிபுர மாலினி – கூர்ஜரம் அருகில் ஜாலந்திரம்(ஜாலந்திர பீடம்), பஞ்சாப்
- திரியம்பக தேவி – திரியம்பகம்(திரிகோணபீடம்), மகாராஷ்டிரம்
- சாமுண்டீஸ்வரி – மைசூர்(சம்பப்பிரத பீடம்), கர்நாடகா
- ஸ்ரீலலிதா – பிரயாகை(பிரயாகை பீடம்), இமாசலப்பிரதேசம்
- நீலாம்பிகை – சிம்லா(சியாமள பீடம்), இமாசலப்பிரதேசம்
- பவானி – துளஜாபுரம்(உத்பலா பீடம்), மகாராஷ்டிரா
- பவானி பசுபதி – காட்மாண்ட்(சக்தி பீடம்), நேபாளம்
- மந்த்ரிணி – கயை(திரிவேணிபீடம்), பீகார்
- பத்ரகர்ணி – கோகர்ணம்(கர்ணபீடம்), கர்நாடகா
- விரஜை ஸ்தம்பேஸ்வரி – ஹஜ்பூர்(விரஜாபீடம்), உ.பி
- தாட்சாயிணி – மானஸரோவர்(தியாகபீடம்), திபெத்
இதையும் படிக்கலாம் : குழந்தை பேறு அருளும் கர்ப்பரட்சாம்பிகை மந்திரம்..!