டெங்கு காய்ச்சலை தடுக்கும் 7 இயற்கை வழிகள்

டெங்கு காய்ச்சலை தடுக்கும் 7 சிறந்த இயற்கை வழிகள் – துளசி, நெல்லிக்காய், பப்பாளி இலை, கருஞ்சீரகம் உள்ளிட்ட சுலபமான முறைகள் பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்!

மழை காலத்தில் பரவக்கூடிய ஆபத்தான நோய் டெங்கு காய்ச்சல். Aedes வகை கொசு கடித்தால் வரும் இந்த நோய் முதலில் சாதாரணமாக தெரிந்தாலும், பின்னர் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். ஆனால் கவலை வேண்டாம். வீட்டில் இருந்தபடியே இயற்கையான முறைகளில் இதை தடுக்கலாம்.

Dengue Fever
Dengue Fever
Contents
  1. டெங்கு காய்ச்சலை தடுக்கும் 7 இயற்கை வழிகள்
    1. துளசி இலை
    2. நெல்லிக்காய்
    3. பப்பாளி இலை சாறு
    4. கருஞ்சீரகம் + தேன்
    5. இஞ்சி மற்றும் இலவங்கப்பட்டை டீ
    6. தண்ணீர் தேங்காமல் பராமரித்தல்
    7. இயற்கை கொசு விரட்டிகள்
  2. டெங்கு காய்ச்சலின் முக்கிய அறிகுறிகள்
    1. திடீரென காய்ச்சல்
    2. தலைவலி மற்றும் கண் பின்புறத்தில் வலி
    3. மூட்டு மற்றும் தசை வலி
    4. உடல் தளர்ச்சி மற்றும் சோர்வு
    5. வாந்தி மற்றும் மயக்கம்
    6. தோலில் சிவந்த புள்ளிகள்
    7. இரத்த பரிசோதனையில் பிளேட்லெட்டுகள் குறைவு
  3. கவனிக்க வேண்டிய அபாய அறிகுறிகள்
  4. எப்போது மருத்துவரை பார்க்க வேண்டும்?
  5. டெங்கு காய்ச்சலுக்கான உணவுமுறை (dengue fever diet plan)
    1. டெங்கு நோயாளிகளுக்கான தினசரி உணவுமுறை அட்டவணை
    2. தவிர்க்க வேண்டிய உணவுகள்
    3. முக்கிய குறிப்புகள்
  6. டெங்கு காய்ச்சல் ஏற்படும் முக்கிய காரணிகள்
    1. முக்கிய குறிப்புகள்
  7. குழந்தைகளில் டெங்கு காய்ச்சல் அறிகுறிகள்
    1. திடீர் காய்ச்சல்
    2. உடல் மற்றும் மூட்டுவலி
    3. உணர்ச்சி மாற்றங்கள்
    4. சோர்வு மற்றும் நலிவு
    5. வாந்தி மற்றும் உடல் எடை குறைதல்
    6. தோலில் புள்ளிகள் அல்லது சிவத்தடைகள்
    7. அசாதாரண ரத்தப்போக்கு
    8. பெற்றோர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்
  8. டெங்கு காய்ச்சல் குணமாக வீட்டு வைத்தியம்
    1. பப்பாளி இலை சாறு
    2. நிலவேம்பு குடிநீர்
    3. இளநீர்
    4. எலுமிச்சை சாறு
    5. உப்பு சேர்த்த கூழ் / சாதம் நீர்
    6. துளசி இலை
    7. கொத்தமல்லி விதை நீர்
    8. முக்கிய அறிவுரை

டெங்கு காய்ச்சலை தடுக்கும் 7 இயற்கை வழிகள்

டெங்கு காய்ச்சல் என்பது ஒரு உயிருக்கு ஆபத்தான வைரஸ் நோயாகும். இது பொதுவாக ஏடிஸ் வகை கொசுக்களின் கடியினால் பரவுகிறது. இதனைத் தடுக்க மருத்துவ முறைகளுடன் கூட, இயற்கை வழிகளும் பாதுகாப்பான மற்றும் திறமையான தீர்வாக இருக்கலாம். இயற்கை மருத்துவம் மற்றும் நம் அன்றாட பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் கொண்டு டெங்கு பரவலைத் தடுப்பதோடு, உடலின் பாதுகாப்புத் திறனையும் அதிகரிக்க முடியும். இந்தக் கட்டுரையில், வீட்டில் எளிதாக பின்பற்றக்கூடிய மற்றும் உடலுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாத 7 முக்கிய இயற்கை வழிகள் பற்றி விரிவாகக் காண்போம். இவை துளசி இலையின் நன்மைகள் முதல், பப்பாளி இலைச்சாற்றின் பயன்பாடு வரை உள்ளவை. டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் இந்த இயற்கை வழிகளை அனைவரும் தெரிந்து கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டியது காலத்தின் தேவை.

துளசி இலை

Tulsi Leaves
Tulsi Leaves

துளசி இலையில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடென்ட் மற்றும் ஆன்டி-வைரல் தன்மைகள், நமது உடலில்  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன.

காலையில் 5-6 துளசி இலைகளை நேரடியாக சாப்பிடலாம் அல்லது துளசி தேநீர் குடிக்கலாம்.

நெல்லிக்காய்

Amla
Amla

நெல்லிக்காயில் வைட்டமின்  C அதிகளவில் இருக்கு. இது உடம்புல ரத்த சுழற்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.

சாப்பாட்டுக்கு பிறகு ஒரு நெல்லிக்காய் சாப்பிடலாம்.

பப்பாளி இலை சாறு

Papaya Leaf
Papaya Leaf

டெங்கு காய்ச்சல் வந்தா ரத்தத்துல தட்டணுக்கள் குறையும். பப்பாளி இலை சாறு குடிச்சா தட்டணுக்கள் தானா அதிகரிக்க உதவுகிறது.

மருத்துவரின் ஆலோசனையுடன் ஒரு நாளுக்கு 2 வேளை, 2 தேக்கரண்டி சாறு குடிக்கணும்.

கருஞ்சீரகம் + தேன்

Black Cumin Honey
Black Cumin Honey

காலையில் ஒரு ஸ்பூன் கருஞ்சீரக தூளை தேனில் கலந்து சாப்பிட்டால் உடல் சூடு குறையும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

இஞ்சி மற்றும் இலவங்கப்பட்டை டீ

Ginger
Ginger

இஞ்சி, இலவங்கப்பட்டை, துளசி இலை போட்டு தயாரிக்கும் ஹெர்பல் டீ, உடலை நச்சுத்தன்மையிலிருந்து பாதுகாக்கிறது.  ஒரு நாளுக்கு ஒரு முறை குடிக்கலாம்.

தண்ணீர் தேங்காமல் பராமரித்தல்

Stagnant Water
Stagnant Water

டெங்கு கொசுக்கள் தேங்கி நிற்கும் தண்ணீரில் தான் முட்டையிடும்.

வீட்டைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.  தண்ணீர் தொட்டிகளை மூடி வைக்க வேண்டும். வாரம் ஒருமுறை சோதிக்க வேண்டும்.

இயற்கை கொசு விரட்டிகள்

Natural mosquito repellents
Natural Mosquito Repellents

இயற்கை கொசு விரட்டி படுக்கும் முன் அறையில் துளசி எண்ணெய், லெமன் கிராஸ் அல்லது யூகலிப்டஸ் எண்ணெய் போட்ட விளக்கை ஏற்றி வைக்கலாம்.

டெங்கு காய்ச்சலின் முக்கிய அறிகுறிகள்

dengue fever symptoms
Dengue Fever Symptoms

இந்தியாவில் பரவலாக காணப்படும் வைரஸ் நோய்களில் ஒன்று டெங்கு காய்ச்சல். இது ஏடிஸ் வகை கொசுக்களின் கடியால் ஏற்படும் ஒரு வைரஸ் நோய். உடல் சோர்வடைந்து, ரத்தத்தில் உள்ள அணுக்கள் குறைந்துவிடும் இது. டெங்குவை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுவது மிகவும் முக்கியமானது. இதற்காக, அதன் முக்கிய அறிகுறிகளை அறிந்து கொள்ளுதல் அவசியம்.

திடீரென காய்ச்சல்

டெங்கு ஆரம்பிக்கும் போது, உடலுக்கு திடீரென 102˚C – 104˚C வரை அதிகமான காய்ச்சல் ஏற்படுகிறது. இது ஒரே நாளில் ஆரம்பமாகலாம். சில நேரம் உடம்பு நடுங்கும்.

தலைவலி மற்றும் கண் பின்புறத்தில் வலி

தலை முழுவதும் வலிக்கலாம், குறிப்பாக கண்ணுக்கு பின்னால் கூடுதல் வலி இருக்கும். இந்த வலி டெங்கு காய்ச்சல் வந்தால் மட்டுமே வரும்.

மூட்டு மற்றும் தசை வலி

உடல் முழுக்க வலி ஏற்படும். கை, கால் மூட்டுகளிலும், தசைகளிலும் பொறுக்க முடியாத வலி இருக்கும்.

உடல் தளர்ச்சி மற்றும் சோர்வு

நாட்கள் போக போக, உடலில் சக்தி குறைந்து, படுக்கையில் மட்டுமே படுத்திருக்க வேண்டும் என்ற அளவுக்கு சோர்வாகலாம்.

வாந்தி மற்றும் மயக்கம்

சிலருக்கு வாந்தி, மனச்சுழற்சி, வயிற்று வலி போன்றவை கூட ஏற்படலாம். சிறிது நேரம் விழித்திருந்தாலும் சோர்வாக இருக்கும்.

தோலில் சிவந்த புள்ளிகள்

டெங்கு நிலைமையைப் பொறுத்து, தோலில் சிவந்த புள்ளிகள் தோன்றும். இது ரத்தக்கணுக்கள் குறைவதால் ஏற்படுகிறது.

இரத்த பரிசோதனையில் பிளேட்லெட்டுகள் குறைவு

புதிய அறிகுறிகளில் ஒன்று. மருத்துவ பரிசோதனையில் பிளேட்லெட்டுகள் (platelets) குறைந்து கொண்டிருந்தால், டெங்கு இருப்பதற்கான உறுதியான அடையாளமாக கருதப்படலாம்.

கவனிக்க வேண்டிய அபாய அறிகுறிகள்

  • அடிக்கடி வாந்தி வருதல்
  • வயிற்றில் வலி ஏற்படுதல்
  • சிறுநீர் கொஞ்சமாக வருதல்
  • இரத்தம் கசிதல் (ஈறுகள், நாக்கு, சிறுநீரில்)
  • மிகவும் சோர்வாக இருத்தல், மயக்கம் வருதல்

எப்போது மருத்துவரை பார்க்க வேண்டும்?

இந்த அறிகுறிகள் தென்பட்டவுடன் வீட்டில் சுய சிகிச்சையை முயற்சிக்காமல், உடனே அருகிலுள்ள மருத்துவரை தொடர்பு கொள்ள வேண்டும். சில நேரங்களில் டெங்கு ரத்தச்சோர்வு (Dengue Hemorrhagic Fever) அல்லது Dengue Shock Syndrome ஆகவும் மாறக்கூடும், இது ஆபத்தான நிலை.

டெங்கு காய்ச்சலுக்கான உணவுமுறை (dengue fever diet plan)

dengue fever diet
Dengue Fever Diet

டெங்கு காய்ச்சல் வந்துள்ளவர்களுக்கு, சரியான உணவுமுறை பின்பற்றுவது உடலை மீட்டெடுக்க மிகவும் அவசியம். காய்ச்சல் காரணமாக உடல் நீர்ச்சத்து இழக்கிறது, பிளேட்லெட்டுகள் குறைகின்றன, சக்தி தளர்கிறது. இந்த நிலைமைகளை சமன்செய்ய, தினசரி சத்தான, எளிதாக செரிகிற உணவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

டெங்கு நோயாளிகளுக்கான தினசரி உணவுமுறை அட்டவணை

நேரம்

உணவு

விளக்கம்

காலை (7.30 am – 9 am) இட்லி அல்லது ராகி இட்லி + கீரை சட்னி எளிதாக செரியும், நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து
எலுமிச்சை நீர் அல்லது மோர் உடல் வெப்பம் சமனாகும், நீர்ச்சத்து மீட்டெடுக்க உதவும்
பப்பாளி பழம் (சிறிய துண்டு) பிளேட்லெட்டுகளை அதிகரிக்க உதவும்
மத்தி நேரம் (11am) மாதுளை சாறு / இளநீர் நோய் எதிர்ப்பு சக்தி, மின்சக்தி கிடைக்கும்
மதிய உணவு (1pm – 2pm) சாதம் + முருங்கைக்காய் குழம்பு + கீரை பொரியல் இரும்புச்சத்து, வைட்டமின் A, ரத்த உற்பத்திக்கு உதவும்
பீர்க்கங்காய் கூட்டு / சீமைச்சுரைக்காய் உடல் வெப்பம் குறைக்கும்
சாதாரண மோர் / வெந்நீர் செரிமானத்திற்கு சிறந்தது
மாலை சிற்றுண்டி (4.30pm) சுண்டல் (பாசிப்பருப்பு/சீமைக்கடலை) புரதம் மற்றும் சக்தி தரும்
பப்பாளி இலைக் கஷாயம் (மருத்துவர் ஆலோசனையுடன்) பிளேட்லெட்டுகளை அதிகரிக்க உதவும்
இரவு உணவு (7.30pm – 8.30pm) கஞ்சி (சாமை/பாசிப்பயறு) + காய்கறி சாப்பாடு உடலை குளிர்விக்கும், எளிதாக செரியும்
ஆப்பிள் / மாதுளை நோய் எதிர்ப்பு சக்திக்காக
தூங்கும் முன் (10pm) சுக்கு காஷாயம் / வெந்நீர் உடல் சுழற்சி சீர்படும், தூக்கம் அதிகரிக்கும்

தவிர்க்க வேண்டிய உணவுகள்

வகை

காரணம்

காரமான, எண்ணெய் அதிகமான உணவுகள் செரிமானத்தில் சிரமம், காய்ச்சலை அதிகரிக்கலாம்
குளிர்பானங்கள் உடல் சக்தி குறைவதற்கும், தொற்றுகள் அதிகரிக்கவும் வாய்ப்பு
ரோட்டி, பீட்சா, ஃபாஸ்ட் ஃபுட்ஸ் சத்து குறைந்தவை, உடலை பாதிக்கும்

முக்கிய குறிப்புகள்

ஒரே நேரத்தில் அதிகமாக சாப்பிட வேண்டாம்; சிறு அளவுகளில் அடிக்கடி சாப்பிடுங்கள்.

  • தினமும் 2.5–3 லிட்டர் வரை நீர் குடிக்க வேண்டும்.
  • பொரி உணவுகள், எண்ணெய், காரம், ஃபாஸ்ட் ஃபுட்ஸ் தவிர்க்க வேண்டும்.
  • உடலுக்கு வலிமை தரும் தயிர், பருப்பு வகைகள், சத்து மிகுந்த கீரைகள் மிகச்சிறந்தவை.

டெங்கு காய்ச்சல் ஏற்படும் முக்கிய காரணிகள்

டெங்கு காய்ச்சல் என்பது வைரஸால் உண்டாகும் ஒரு தீவிர தொற்று. இது அதிகமாக மழைக்காலங்களில் பரவுகிறது. டெங்கு நோய் பரவக் காரணமான விஷயங்களை கீழே உள்ள அட்டவணையில் பார்க்கலாம்.

காரணம்

விளக்கம்

ஏடிஸ் கொசுக்கள் (Aedes Mosquitoes) டெங்கு நோய் பரவக் காரணமான கொசுக்கள் இரண்டு வகை. Aedes aegypti, Aedes albopictus என்பவை அவை. இந்தக் கொசுக்கள் பொதுவாக காலையிலும் மாலையிலும் தான் மனிதர்களைக் கடிக்கும்.
தண்ணீர் தேங்கி நிற்கும் இடங்கள் பயன்படுத்தாத டயர்கள், பூச்சட்டிகள், நீர்த்தொட்டிகள், வீட்டுக் கூரைகளில் தேங்கி நிற்கும் மழை நீரில் கொசுக்கள் முட்டையிட்டு பெருகும்.
சுகாதாரமின்மை உள்ள சூழல் சரியாக வெளியேற்றப்படாத கழிவுநீர், குப்பைகள், கழிப்பறை பக்கத்தில் உள்ள திறந்த நீர்த்தொட்டிகள் – இவை எல்லாம் நோய்களை வேகமாகப் பரப்புகின்றன.
மழைக்கால பருவம் மழை அதிகமாக பெய்து, ஈரப்பதம் கூடும்போது கொசுக்கள் பெருக நல்ல சூழல் ஏற்படுகிறது. அதனால் மழைக்காலத்தில் நோய் வர வாய்ப்பு கூடுதலாக உள்ளது.
காலநிலை மாற்றம் வெப்பநிலை உயர்வு, ஈரப்பதமும் அதிகமாகும் போது கொசுக்கள் நன்றாக வளரும். இதனால் நோய் பரவும் அபாயம் அதிகரிக்கிறது.
 

அதிக மக்கள் அடர்த்தி

நகரங்களில் மக்கள் கூட்டமும், நெருக்கமான வீடுகளும், சுத்தமில்லாத சூழலும் நோய் பரவுவதை வேகமாக்குகிறது.
பயணங்கள் நோய் உள்ள இடங்களில் இருந்து வேறு இடங்களுக்கு மக்கள் செல்வதால், நோய் புதிய இடங்களுக்குப் பரவலாம்.

முக்கிய குறிப்புகள்

  • Aedes கொசுக்கள் குறுகிய தூரத்திலேயே பறக்கின்றன, ஆனால் அதிரடி வேகத்தில் பரப்புகின்றன.
  • இவை அதிகமாக காலை 6-9 மணி மற்றும் மாலை 4-7 மணி இடையே கடிக்கின்றன.
  • டெங்கு பரவுவதை தடுக்க, கொசு இனப்பெருக்கம் தடுக்க வேண்டும்.

குழந்தைகளில் டெங்கு காய்ச்சல் அறிகுறிகள்

Dengue fever symptoms in children
Dengue Fever Symptoms in Children

டெங்கு காய்ச்சல் என்பது கொசுக்களால் பரவும் ஒரு வைரஸ் நோயாகும். இது சிறுவர் மற்றும் பெரியவர்கள் இருவரையும் பாதிக்கக்கூடியது. குழந்தைகளில் இந்த நோய் அடையாளம் காண்பது சற்று கடினமாக இருக்கலாம், ஏனெனில் சில அறிகுறிகள் பொதுவான காய்ச்சலோடு மிகவும் ஒத்திருக்கலாம். எனவே, கீழ்காணும் அறிகுறிகளை கவனமாக பரிசோதிக்க வேண்டும்.

திடீர் காய்ச்சல்

டெங்கு ஏற்பட்ட குழந்தைக்கு திடீரென உயர் காய்ச்சல் ஏற்படும். வெப்பநிலை 102°F முதல் 104°F வரை செல்வதுண்டு. இந்த காய்ச்சல் 2 முதல் 7 நாட்கள் வரை நீடிக்கலாம்.

உடல் மற்றும் மூட்டுவலி

தலை, கண் பின்னால், கைகள், கால்கள் மற்றும் முதுகு பகுதிகளில் வலிகள் ஏற்படலாம். குழந்தைகள் வலியால் இடம் மாற்றுவதற்கும் தயங்க வாய்ப்பு உள்ளது.

உணர்ச்சி மாற்றங்கள்

சில குழந்தைகள் மிகவும் சோர்வாக, தூக்கமாக அல்லது ஏமாற்றமடைந்தபடி தோன்றக்கூடும். சில நேரங்களில் மனச்சோர்வும் காணப்படும்.

சோர்வு மற்றும் நலிவு

பழக்க வழக்கமான செயல்களில் ஆர்வம் குறைந்து, குழந்தை சோர்வாக இருக்கும். மிகக் குறைவான ஆற்றல் மட்டத்துடன் காணப்படலாம்.

வாந்தி மற்றும் உடல் எடை குறைதல்

காய்ச்சலோடு சேர்ந்து, வாந்தி மற்றும் வாயுவிழுப்பும் ஏற்படலாம். உணவுக்கு விருப்பு குறைந்து உடல் எடையும் குறையக்கூடும்.

தோலில் புள்ளிகள் அல்லது சிவத்தடைகள்

காய்ச்சலுக்குப் பிறகு, குழந்தையின் தோலில் சிவப்பான புள்ளிகள் தோன்றலாம். சில நேரங்களில் இது ஒவ்வாமை போன்ற தோற்றத்தைக் கொடுக்கக்கூடும்.

அசாதாரண ரத்தப்போக்கு

பழுதடைந்த நிலையில், நாசி, ஈறிகள் அல்லது மலத்தில் ரத்தம் காணப்படலாம். இது உடனடியாக மருத்துவ உதவிக்கு செல்ல வேண்டிய எச்சரிக்கை அறிகுறி.

பெற்றோர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்

  • குழந்தையை கொசுக்களில் இருந்து பாதுகாத்தல் (மெஷ்/நெட்டில் உறங்கச் செய்தல்).
  • அதிகளவில் சுத்தமான நீர் குடிக்கச் செய்தல்.
  • மூச்சுத் திணறல், அதிக காய்ச்சல், வாந்தி, வயிற்றுவலி ஆகியவை இருந்தால் உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

டெங்கு காய்ச்சல் குணமாக வீட்டு வைத்தியம்

டெங்கு காய்ச்சல் என்பது கொசுவின் மூலம் பரவும் வைரஸ் நோயாகும். இதற்கு தற்போது தனித்துவமான மருந்தில்லை. எனவே உடலின் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, பாதிப்புகளை குறைக்க உதவும் இயற்கை நிவாரணங்களை வீட்டிலேயே பின்பற்றலாம். மருத்துவ ஆலோசனையை புறக்கணிக்காமல், கூடுதலான ஆதரவாக இவைகளை பயன்படுத்தலாம்.

பப்பாளி இலை சாறு

Papaya Leaf Juice
Papaya Leaf Juice

பப்பாளி இலைகளில் உள்ள புஷ்டிகூறுகள் இரத்த அணுக்களை (platelets) அதிகரிக்க உதவுகிறது. குழந்தைகளுக்கு மருத்துவரின் அறிவுரையுடன் பயன்படுத்த வேண்டும்.

2-3 பப்பாளி இலைகளை நன்றாக கழுவி, சாற்றாக நசுக்கி, தினமும் 1-2 வேளை 1-2 மேசைக் கரண்டி அளவுக்கு கொடுக்கலாம்.

நிலவேம்பு குடிநீர்

nilavembu kashayam
Nilavembu Kashayam

நிலவேம்பு உடலின் தாகம் தணித்து, காய்ச்சல் குறைக்க உதவுகிறது. இது ஒரு சிறந்த மூலிகைத் தாவரம்.

நிலவேம்பு தழைகளை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கலாம். ஒருநாளைக்கு ஒருமுறை குடிக்கலாம்

இளநீர்

Tender Coconut Water
Tender Coconut Water

இளநீர் உடலில் சுரக்கும் திரவத்தினை சமநிலைப்படுத்த உதவும். இது சிறந்த இயற்கை இஸ்ட்ரோலைட் ஆகும்.

இளநீரை தினமும் 1-2 முறை குடிக்கலாம்.

எலுமிச்சை சாறு

lemon juice
Lemon Juice

எலுமிச்சையில் உள்ள வைட்டமின் C உடலின் எதிர்ப்பு சக்தியை உயர்த்துகிறது.

சிறிதளவு தேன் சேர்த்து எலுமிச்சை சாறு குடிக்கலாம்.

உப்பு சேர்த்த கூழ் / சாதம் நீர்

Koozh
Koozh

காய்ச்சல் பாதித்த நிலையில் இருக்கும் போது எளிதில் ஜீரணமாகும் திரவ உணவுகள் மிக முக்கியம்.

சாதம் நீர், கஞ்சி, சாதம் கூழ் ஆகியவை உப்பு மற்றும் சிறிது மிளகுத்தூள் சேர்த்து கொடுக்கலாம்.

துளசி இலை

Tulsi Leaves
Tulsi Leaves

துளசி இலைகள் உடலின் நச்சுக்களை வெளியேற்றும் சக்தி கொண்டது.

துளசி இலையை காய்ச்சிய நீராகவோ அல்லது நேரடியாக மென்று சாப்பிடலாம்.

கொத்தமல்லி விதை நீர்

Coriander seeds water
Coriander Seeds Water

கொத்தமல்லி விதைகளை நன்றாக கொதிக்க வைத்து குடிப்பது உடலை குளிர்ச்சி செய்கிறது மற்றும் காய்ச்சல் குறைக்க உதவுகிறது.

1 ஸ்பூன் கொத்தமல்லி விதையை ஒரு கப் நீரில் 5 நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி சாப்பிடலாம்.

முக்கிய அறிவுரை

வீட்டில் இயற்கையாக குணமாகும் வழிகள் பல உள்ளன. ஆனால் டெங்கு காய்ச்சல் ஒரு தீவிர நோயாக இருக்கக்கூடியதால், சுய சிகிச்சைக்கு மட்டும் சார்ந்துவிடாமல், மருத்துவ ஆலோசனையுடன் தொடர்வது மிக முக்கியம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *