குழந்தைகளை தாக்கும் தக்காளி காய்ச்சல்..!

tomato fever

கொரோனா வைரஸின் நான்காவது அலைக்கு மத்தியில் தற்போது கேரளாவில் சில மாவட்டங்களில் தக்காளி வைரஸ் என்று அழைக்கப்படும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தக்காளி காய்ச்சல் என்பது இந்தியாவின் கேரளா மாநிலத்தில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை தாக்கும் வைரசு காய்ச்சலாகும். இந்த நோய் வைரசு காய்ச்சலா அல்லது சிக்குன்குனியா அல்லது டெங்குக் காய்ச்சலின் பின்விளைவா என்ற விவாதமும் நடைபெறுகிறது. ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை குறி வைத்து தாக்கும் இந்த காய்ச்சல் பாதிப்பு காரணமாக தோலில் சிவப்புத் திட்டுக்கள் ஏற்படுவதால் இது தக்காளி காய்ச்சல் என அழைக்கப்படுகிறது.

இந்த தக்காளி காய்ச்சலை காக்சாக்கி ஏ 16 (COXSACKIE A 16 VIRUS)எனும் வைரஸ் தோற்றுவிக்கிறது. இவ்வகை வைரஸ் தொற்று குழந்தைகளிடையே மிகவும் மிதமான வீரியத்துடன் வெளிப்படும். இந்த வைரஸ் தாக்கிய குழந்தைகளுக்கு வாய், கை மற்றும் பாதங்களில் கொப்புளங்கள் தோன்றலாம்.

தக்காளி காய்ச்சலின் அறிகுறிகள்

  • அதிக காய்ச்சல்
  • உடல் வலி
  • மூட்டுகளில் வீக்கம்
  • சோர்வு
  • தக்காளி வடிவில் சொறி
  • கைகளின் நிறமாற்றம்
  • முழங்கால்களின் நிறமாற்றம்

இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில், உடலில் கிட்டத்தட்ட தக்காளி அளவு சொறி வெளியேறும். தோலில் எரியும் உணர்வு ஏற்படலாம். நீரிழப்பு அறிகுறிகள் நாக்கில் உலர்ந்த வாயுடன் சேர்ந்து தோன்றும். சில நோயாளிகள் தங்கள் உடலில் உருவான தக்காளி போன்ற சொறி முதலில் புழுக்கள் வெளியேறிய கொதிப்பை உருவாக்கியது என்று கூறியுள்ளனர்.

தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சை

  • குழந்தைக்கு இந்த அறிகுறிகள் இருந்தால், அருகில் உள்ள மருத்துவரை அணுகவும்.
  • இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக திரவங்களை உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
  • குழந்தைகளை தொற்று நோயிடமிருந்து விலக்கி வைக்க வேண்டும்.
  • நோயாளிக்கும் அவரைச் சுற்றியுள்ளவர்களுக்கும் தூய்மையை பராமரிப்பது முக்கியம்.
  • பல சமயங்களில் காய்ச்சல் ஒரு வாரம் நீடிக்கும் என்பதால் சரியான ஓய்வு தேவை.
  • இவ்வகை வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு அபாயம் இல்லை. எனவே இதுகுறித்து வீண் பீதி அடைய வேண்டிய அவசியம் இல்லை.
  • இந்த தொற்றுக்குள்ளான குழந்தைகளுக்கு வாயில் புண் இருப்பதால் உணவு சரிவர உண்ணமாட்டார்கள். எனவே இயன்றவரை திரவமாக உணவை வழங்கிட வேண்டும்.
  • இந்த நோய்க்கு நேரடியாக வைரஸ் கொல்லி மருந்துகள் இதுவரை இல்லை. ஆயினும் இந்தத் தொற்றுக்குள்ளான குழந்தைகளுக்கு காய்ச்சல், வாய்ப்புண் மற்றும் நீர் இழப்பிற்கு அதற்கு உகந்த சிகிச்சை நம்மால் வழங்கிட இயலும். அதிகபட்சம் ஒரு வாரத்திற்குள் இந்தத் தொற்றின் தாக்கத்தில் இருந்து குழந்தைகள் மீண்டு விடுவர்.

தக்காளிக்கு தொடர்பில்லை

நாம் உண்ணும் தக்காளிக்கும் இந்த காய்ச்சலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. தக்காளி காய்ச்சல் என்று பேச்சு வழக்கில் அழைக்கப்படும். இந்த நோய்க்கு மருத்துவ உலகத்தில் HFMD HAND FOOT MOUTH DISEASE என்று பெயர். இந்த நோய் எண்டெரோ வைரஸ் குடும்பத்தின் வைரஸ்களினால் ஏற்படுகிறது.

இதையும் படிக்கலாம் : கோடை காலத்தில் குழந்தைகளுக்கு குளிர்ச்சி தரும் உணவுகள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *