பழந்தமிழரின் அளவை முறைகள் நில அளவை, முகத்தல் அளவைகள், நிறுத்தல் அளவைகள், கால அளவுகள் முறைகள் பற்றி பார்க்கலாம்.
நில அளவை
| 100 ச.மீ | 1 ஏர்ஸ் |
| 100 ஏர்ஸ் | 1 ஹெக்டேர் |
| 1 ச.மீ | 10 .764 ச அடி |
| 2400 ச.அடி | 1 மனை |
| 24 மனை | 1 காணி |
| 1 காணி | 1 .32 ஏக்கர் |
| 144 ச.அங்குலம் | 1 சதுர அடி |
| 435 . 6 சதுர அடி | 1 சென்ட் |
| 1000 ச லிங்க்ஸ் | 1 சென்ட் |
| 100 சென்ட் | 1 ஏக்கர் |
| 1லட்சம்ச.லிங்க்ஸ் | 1 ஏக்கர் |
| 2 .47 ஏக்கர் | 1 ஹெக்டேர் |
| 1 ஹெக்டேர் | 2.5 ஏக்கர் (2.47 ஏக்கர் ) |
| 1 ஏக்கர் | 4840 குழி (Square Yard) |
| 100 சென்ட் | 4840 சதுர குழிகள் |
| 1 சென்ட் | 48.4 சதுர குழிகள் |
| 1 ஏக்கர் | 4067.23 சதுர மீட்டர் (Sq. Meter ) |
| 1 ஏக்கர் | 43560 சதுர அடி |
| 1 குழி (Square Yard) | 0.8361 சதுர மீட்டர் (Square Meter) |
| 1 ச.மீ(Square Meter) | 1.190 குழி |
| 1 குழி | 9 சதுர அடி |
| 1 ச.மீ(Square Meter) | 10.76 சதுர அடி |
| 1 குந்தா (Guntha) | 121 குழி = 101.17 சதுர மீட்டர் |
| 1 குந்தா (Guntha) | 33 அடி * 33 அடி = 1089 சதுர அடி |
| 100 குழி | ஒரு மா |
| 20 மா | ஒரு வேலி |
| 3.5 மா | ஒரு ஏக்கர் |
| 6.17 ஏக்கர் | ஒரு வேலி |
| 16 சாண் | 1 கோல் |
| 18 கோல் | 1 குழி |
| 100 குழி | 1 மா |
| 240 குழி | 1 பாடகம் |
| 20 மா | 1 வேலி |
முகத்தல் அளவைகள்
| ஒரு ஆழாக்கு | நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லீட்டர் |
| ஒரு உழக்கு | முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லீட்டர் |
| ஒரு கலம் | அறுபத்து நாலரை லீட்டர் |
| ஒரு தூணி | இருபத்தி ஒன்றரை லீட்டர் |
| ஒரு நெய்க் கரண்டி | தேக்கரண்டி அளவு |
| ஒரு எண்ணெய்க் கரண்டி | இரு நூற்றி நாற்பது மில்லி லீட்டர் |
| ஒரு பாலாடை | முப்பது மில்லி லீட்டர் |
| ஒரு குப்பி | எழுநூறுமில்லி லீட்டர் |
| ஒரு அவுன்ஸ் | முப்பத்தியொரு கிராம் |
| முன்னூற்று அறுபது நெல் | ஒரு சோடு |
| ஐந்து சோடு | ஒரு அழாக்கு |
| இரண்டு ஆழாக்கு | ஒரு உழக்கு |
| இரண்டு உழக்கு | ஒரு உரி |
| இரண்டு உரி | ஒரு நாழி |
| எட்டு நாழி | ஒரு குறுணி |
| இரண்டு குறுணி | ஒரு பதக்கு |
| இரண்டு பதக்கு | ஒரு தூணி |
| மூன்று தூணி | ஒரு கலம் |
நிறுத்தல் அளவைகள்
| மூன்றே முக்கால் குன்றி மணி எடை | ஒரு பணவெடை |
| முப்பத்தி ரெண்டு குன்றி மணி எடை | ஒரு விராகன் எடை |
| பத்து விராகன் எடை | ஒரு பலம் |
| இரண்டு குன்றி மணி எடை | ஒரு உளுந்து எடை |
| ஒரு ரூபாய் எடை | ஒரு தோலா |
| மூன்று தோலா | ஒரு பலம் |
| எட்டு பலம் | ஒரு சேர் |
| நாற்பது பலம் | ஒரு வீசை |
| ஐம்பது பலம் | ஒரு தூக்கு |
| இரண்டு தூக்கு | ஒரு துலாம் |
| ஒரு குன்றி எடை | நூற்றி முப்பது மில்லி கிராம் |
| ஒரு பணவெடை | நானூற்றி எண்பத்தெட்டு மில்லி கிராம் |
| ஒருதோலா | அண்ணளவாக பன்னிரண்டு கிராம் (துல்லியமாக 11.7 கிராம்) |
| ஒரு பலம் | முப்பத்தி ஐந்து கிராம் |
| ஒரு வீசை | ஆயிரத்தி நானூறு கிராம் |
| ஒரு விராகன் | நான்கு கிராம் |
கால அளவுகள்
| இருபத்தி நான்கு நிமிடங்கள் | ஒரு நாளிகை |
| இரெண்டரை நாழிகை | ஒரு மணி |
| மூன்றே முக்கால் நாழிகை | ஒரு முகூர்த்தம் |
| அறுபது நாழிகை | ஒரு நாள் |
| ஏழரை நாழிகை | ஒரு சாமம் |
| ஒரு சாமம் | மூன்று மணி |
| எட்டு சாமம் | ஒரு நாள் |
| நான்கு சாமம் | ஒரு பொழுது |
| ரெண்டு பொழுது | ஒரு நாள் |
| பதினைந்து நாள் | ஒரு பக்கம் |
| ரெண்டு பக்கம் | ஒரு மாதம் |
| ஆறு மாதம் | ஒரு அயனம் |
| ரெண்டு அயனம் | ஒரு ஆண்டு |
| அறுபது ஆண்டு | ஒரு வட்டம் |
இதையும் படிக்கலாம் : பாரம்பரிய நெல் வகைகளும் அதன் பயன்களும்