பாரம்பரிய நெல் வகைகளும் அதன் பயன்களும்

பாரம்பரிய நெல் வகைகளும் அதன் பயன்களும்

இந்தியாவில் பாரம்பரிய நெல் வகைகள் 200000 மேற்பட்ட இருந்துள்ளதாக அறியப்படுகிறது. பசுமைப் புரட்சியின் விளைவாக பல பாரம்பரிய நெல் ரகங்கள் அழிக்கப்பட்டன.

மாப்பிளை சம்பா

உடலை பல படுத்தும் மாமருந்து மாப்பிளை சம்பா. திருமணதிற்கு தயாராகும் மணமகன்கள் தொடர்ச்சியாக 41 நாட்கள் இதன் நீராகாரத்தை உண்டு வந்தால் உடல் பலம் அதிகரிக்கும்.

கவுணி அரிசி

புது மாப்பிள்ளைக்கான விருந்துணவு அரிசி. இதன் கஞ்சி குடித்தால் குதிங்கால் வலி நீங்கும்.

சிவப்பு கவுணி அரிசி

புது மண தம்பதியர் உண்ண வேண்டிய அரிசி . இது ஒரு பலகார அரிசி. இட்லி, ஆப்பம், பணியாரம் செய்ய ஏதுவானது. குழந்தைகளுக்கு நோயெதிர்ப்பு சக்தி தரும். கருவில் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் உருவாகும்.

வாலான் சம்பா அரிசி

சுகப்பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும். இடுப்பு வலுவாகும். ஆண்களுக்கு விந்து சக்தி கூடும்.

சேலம் சன்னா

கர்ப்பகாலத்தில் உண்ண வேண்டிய அரிசி. குழந்தை பேரு நன்முறையில் நடக்கும். களைப்பில்லாமல் வேலை செய்ய உதவும். இது நாய் கடி விஷத்தை முறிக்கும்.

பூங்காற் அரிசி

மகப்பேறு காலங்களில் உண்ண வேண்டிய அரிசி. தாய்பால் சுரக்கும்.

கட்ட சம்பா அரிசி

நோய் எதிர்ப்பு சக்தி தரும்.

சீரகச் சம்பா அரிசி

அழகு தரும். எதிர்ப்பு சத்தி கூடும்.

சிங்கினி கார் அரிசி

எல்லா விதமான நோயாளிகளும் உண்ண வேண்டிய அரிசி. உடல் நலம் பெற உதவும்.

இலுப்பைபூ சம்பா அரிசி

சர்க்கரை நோய் வராமல் தடுக்கும். மூட்டு வலி,பக்க வாதம் போன்ற நோய்க்கான மருந்து. நரம்பு பிரச்சனையின் மருந்து.

கிச்சிலி சம்பா அரிசி

இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம்.

காட்டுயானம் அரிசி

இந்த அரிசியில் கஞ்சி வைத்து கறிவேப்பில்லை போட்டு மூடி வைத்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

இப்படி தொடர்ச்சியாக செய்தால் புற்றுநோயால் ஏற்படும் புண்கள் ஆறும். இதுவே புற்று நோய்க்கு மருந்தாக இருக்க வேண்டும் என ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.

சூரகுருவை அரிசி

நோய் எதிர்ப்பு சக்தி தரும்.

பனங்காட்டு குடவாழை அரிசி

தொழிலாளர்களின் தோழன் இந்த அரிசி. அந்த அளவிற்கு நோய் எதிர்ப்பும், உடல் வலிமையையும் தரும்.

கருடன் சம்பா

நோய் எதிர்ப்பு சக்தி தரும். சாப்பாடு மற்றும் பலகார அரிசி.

கருங்குறுவை அரிசி

இதன் நெல் கரு நிறம். அரிசி செந்நிறம்; இது ஒரு மாமருந்து. இந்த அரிசியுடன் மூலிகை மருந்து சேர்த்தால் லேகியம் செய்ய முடியும்.

அது யானைக்கால் நோய்க்கான மருந்து. குஷ்டதிற்க்கும், விஷகடிக்கும் மாமருந்து. உடலை வலுவாக்கும் காயகல்ப சக்தி கொண்டது.

இந்த அரிசி ஒரு பங்கும், தண்ணீர் மூன்று பங்கும் சேர்த்து மண்பானையில் ஊரவைத்து ஆறுமாதம் கழித்து எடுத்தால் பால் போல் இருக்கும். இதற்க்கு ‘அன்ன காடி’ என்று பெயர். இது காலராவிர்க்கான மருந்து.

கார் அரிசி

சர்க்கரை நோய்க்கும், வாதம் சம்பந்தமான நோய்க்கும், கரப்பான்களுக்கும் மருந்தாகும்.

தங்க சம்பா

இந்த அரிசியை தொடர்ந்து உணவிலும், பலகாரத்திலும் சேர்த்து வந்தால் முகம் பொலிவுடன் ஜொலிக்கும். நோய் எதிர்ப்பு திறனும் கொடுக்கும்.

தூயமல்லி அரிசி

மேல குறிப்பிட்ட எல்லா அரிசிகளும் சிவப்பரிசி. கட்ட சம்பா தவிர்த்து. தூய மல்லி அரிசியானது இன்னும் மல்லிகை போல் பளபள வென இருக்ககூடியது.

மக்கள் எதிர்ப்பார்க்கும் எல்லா குணங்களும் கொண்ட ஒரு அரிசி. தெவிட்டாத, நோய் எதிர்ப்பு சக்தி தரும் அரிசி.

இந்த பாரம்பரிய அரிசி எதுவும் உரமோ, பூச்சி கொல்லி மருந்தோ இல்லாமலேயே வளரக்கூடியது. மேற்காணும் அரிசி வகைகள் தானாக வளரக்கூடியது.

தானே எதிர்ப்பு திறனுடன் வளர்வதால் இந்த அரிசியை உன்னுபவர்களுக்கும் அதே எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் வல்லமை கொண்டது. பாரம்பரிய அரிசி உண்போம். ஆரோக்கியத்தை பேணி, ஆயுளை அதிகரிப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *